Oct 5, 2009

அன்னாசிபூ


இலிசியம் வீரம் என்ற தாவிரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை சிறந்த கிருமிநாசினி. இது வைரஸ், புளு வைரஸ் போன்ற நுண் கிருமிகளை பரவாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் அன்னாசிபூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் கிடைக்கும்.

சுவாசப்பாதையில் எற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க அன்னாசிபூவை பொடித்து அரை முதல் ஒருகிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து உட்கொள்ள சுவாசாபாதையில் எற்பட்ட தொல்லைகள் தீரும்.

அன்னாசிபூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி. நீரில்போட்டு கொதிக்க வைத்து 100மி.லி. யாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசிபூவை பொடி செய்து அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பாலில் அல்லது
சூடான நீரில் கலந்து சாப்பிட்டு வர தோற்று காச்சலினால் தோன்றும் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும், செரிமான கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றி பசியை உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிபூ பிரியாணி போன்ற செரிக்க கடினமான உணவுகள் தயார் செய்யும்போது மசாலாவாக சேர்க்கப்படுகிறது

Oct 4, 2009

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கூடாது : பா.ஜ.க.திவிரவாத இயக்கம் கருத்து



சென்னை, அக். 4: தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா கூறினார்.

தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாகத் தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது என்றார் அவர். செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் மேலும் கூறியது: தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும்.

இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை தன் கைவசம் வைத்துக் கொண்டு இந்தியாவுக்குள் சீனா அடிக்கடி ஊடுருவி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக ஊடுருவல் இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அரசைக் கண்டிக்கிறோம்.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் விரும்பும் அனைத்துப் பாடத் திட்டத்தையும் தமிழக அரசு தயாரிக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். பசுவதைத் தடைச்சட்டம் தமிழகத்தில் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் சேமநல நிதியில் 3 முதல் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் போடுவது குறித்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் எச். ராஜா.

தடையை மீறி ஆர்எஸ்எஸ் திவிரவாதிகள் ஊர்வலம்: ராம கோபாலன் உள்பட 500 திவிரவாதிகள் கைது


கோவை, அக். 4: கோவையில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி நிறுவனத் தலைவர் திவிரவாதி ராம கோபாலன் உள்பட ஆர்.எஸ்.எஸ் திவிரவாதிகள் 500 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.திவிரவாத இயக்கத்தின் 84-வது ஆண்டு துவக்க தினத்தையொட்டி ஊர்வலம் நடத்த போலீஸôரிடம் அனுமதி கோரினர்.

அனுமதி கிடைக்காததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே ஏராளமான ஆர்.எஸ்.எஸ். திவிரவாதிகள் குவிந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே திவிரவாதிகள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, ஊர்வலமாகச் சென்ற இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் உள்பட 163 போலீஸôர் கைது செய்தனர். இந் நிலையில், சாலை மறியலில் சிலர் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸôர் கைது செய்தனர்.

சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பேரணி நடத்த முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர். சுங்கம் அருகே ஊர்வலமாக சென்ற 71 பேரையும் போலீஸôர் கைது செய்தனர். ராஜவீதி, வடகோவை, கிராஸ் கட் சாலை ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற 244 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு தலைமை வகித்து இந்து முன்னணி நிறுவனத் தலைவர் திவிரவாதி ராம கோபாலன் பேசியது:

ஆர்எஸ்எஸ் திவிரவாத இயக்கத்தின் ஆண்டு விழாவையொட்டி இந்தியா முழுவதும் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க போலீஸôர் மறுத்து வருகின்றனர். தமிழக அரசின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது என்றார்.

Oct 3, 2009

காஷ்மீருக்கு சிறப்புப் பிரதிநிதி: முஸ்லீம் நாடுகள் நியமனம்

நியூயார்க், அக். 2: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு முஸ்லீம் நாடுகள் அமைப்பு (ஓ.ஐ.சி.) தங்களது சிறப்புப் பிரதிநிதியை நியமித்துள்ளன. இதன் மூலம், ""காஷ்மீர் என்பது இந்தியாவின் மாநிலம் அல்ல, பிரச்னைக்குரிய பகுதி, அதை இந்தியாவிடமிருந்து மீட்க வேண்டும்'' என்கிற பாகிஸ்தானின் நிலையைத் தங்கள் அமைப்பு ஆதரிக்கிறது என்பதையே இச் செயல் மூலம் ஓ.ஐ.சி. உணர்த்தியுள்ளது.

57 நாடுகளை உள்ளடக்கிய முஸ்லீம் நாடுகளின் அமைப்பு (ஓ.ஐ.சி.) நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் கூடி காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தது.

இதையடுத்து தங்களது தரப்பில் காஷ்மீருக்கான சிறப்புப் பிரதிநிதி நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த அப்துல்லா பின் அப்துல் ரஹ்மான் அல் பாக்கர் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சீனா செல்லும் காஷ்மீர் மக்களுக்கு அந்நாடு தனி விசாவை வழங்கி பிரச்னையை உருவாக்க முயலுகிறது. காஷ்மீர் மக்களுக்கு தனி விசா வழங்குவதன் மூலம் காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்று பிரச்னையை ஏற்படுத்துகிறது சீனா.

சீனாவின் இந்தச் செயலை தொடர்ந்தே ஓ.ஐ.சி. இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தூண்டு சக்தி: முஸ்லீம் நாடுகளின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் தூண்டு சக்தியாக பாகிஸ்தான் இருப்பது வெளிப்படை என பாசிச பயங்கரவாதிகள் கூறிவருகின்றனர்.

காஷ்மீருக்கு சிறப்புப் பிரதிநிதியை முஸ்லீம் நாடுகள் நியமித்ததைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பாகிஸ்தான் தலைவர்களும், காஷ்மீர் பிரிவினைவாதிகளும் கருதுகின்றனர். இதை, ஐ.நா. சார்பில் காஷ்மீருக்கு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்க நெருக்குதல் அளிக்க தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகவும் நினைக்கின்றனர் என்றும் பாசிச பயங்கரவாதிகள் கருதுகின்றனர்.

ஹுரியத் மாநாட்டுக் கட்சி வரவேற்பு:காஷ்மீருக்கு முஸ்லீம் நாடுகள் சிறப்புப் பிரதிநிதியை நியமித்துள்ளதை ஹுரியத் மாநாட்டுக் கட்சி வரவேற்றுள்ளது.

சிறப்புப் பிரதிநிதி நியமனம் வரவேற்கத்தக்கது. இது காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு இணங்க நீண்டகால பிரச்னைக்குத் தீர்வு காண பெரும் உதவியாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் மிர்வாஸ் உமர் ஃபரூக் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் நாடுகளின் தலைவர்களை மிர்வாய்ஸ் உமர் பரூக் அடுத்தடுத்து சந்தித்து காஷ்மீருக்குச் சிறப்புப் பிரதிநிதி நியமிப்பது குறித்து விவாதித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் வெறியாட்டம் - பலியாகும் குழந்தைகள்

இஸ்ரேல் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இஸ்ரேல் பாலஸ்தீன போராட்டம்தான். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த கொடூர போராட்டம் ஜான் ஏறி முழம் சறுக்கிய கதையாக முடிவுக்கு வராமல் நடந்து கொண்டிருக்கிறது.

விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் பாலஸ்தீனர்களின் ஆயுதப் போராட்டம் அவ்வப்போது தலை தூக்குவதும் பிறகு குறைவதுமாக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போராட்டத்தில் அதிகமாக பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! யுனிசெப்பின் கணக்கெடுப்பின்படி கடந்து ஐந்து வருடங்களில் 542 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலின் துப்பக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக முஹம்மது அல் துர்ரா எனும் 12 வயது சிறுவன் தன் தந்தையின் கைகளிலேயே, இஸ்ரேலிய ராணுவத்தால் சுடப்பட்டு மரணமடைந்தான்.

இச்செய்தி தவறானது என்று இங்கு ஒரு பதிவில் சமீபத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு வேளை இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு வலையுலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் செய்தியேல்லாம் ஆதாரம் நிறைந்ததாகத் தோன்றலாம்.

உலகமே இச்சிறுவனின் கொடுமையான மரணத்தை டிவியில் பார்த்தது. அச்சிறுவனின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற ஒரு சுவற்றின் அருகிலும் ஒரு மெட்டல் பேரலுக்கு (Metal Barrel) மத்தியில் தானும், தனது மகனும் பயந்து மறைந்து நின்றனர். என்னதான் போராடியும் முடியாது தன் மடியிலேயே தனது மகனை இஸ்ரேலிய ராணுவத்தின் இரு தீவிரவாதிகளின் துப்பக்கி குண்டுகளுக்கு பலியாகக் கொடுத்தான் அந்த தகப்பன்.

அச்சிறுவன் தன் தந்தையின் மார்பைக் கட்டிபிடித்து பயந்து அழுவதும், தந்தை இரு கைகளாலும் அவனை மறைகக முயல்வதும், துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் இருவரின் பின்னால் உள்ள சுவற்றை துளைப்பதும், பிறகு இறுதியாக அச்சிறுவனின் உடலைத் துளைப்பதுமாக அந்த வீடியோ படம் காட்டுகிறது. மகன் தன் மடியில் செத்துக் கிடப்பதைப் பார்த்த தந்தை வலிப்பு வந்து மயக்கமடைகிறான்.

இந்தக் கொடுமையான காட்சியைப் படமாக்கியது பிரான்ஸ் 2 டிவிக்காக பணிபுரியும் தலால் அபு ரஹ்மா எனும் பாலஸ்தீன கேமராமேன். இந்தப் படம் இஸ்ரேலின் கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஐகோனாக (icon) பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் மறையாமல் இருக்கிறது.

இந்நிகழ்ச்சியை பின்னனியாக வைத்து நூற்றுக் கணக்கான சோகக் கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. எகிப்து, துனீசியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் முஹம்மது அல் துர்ராவின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்புகளை வெளியிட்டன. அரபு நாடுகளில் உள்ள பலத் தெருக்களுக்கும் கார்டன்களுக்கும் இச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்டது.

கெய்ரோ நகரில் இஸ்ரேலின் தூதரகம் இருக்கும் தெருவிற்கு எகிப்திய அரசு இச்சிறுவனின் பெயரை வைத்திருக்கிறது.

உன்னைப்போல் ஒருவன் திரைக்காவியம்



ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் இழிவூபடுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன். இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி.

"குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.

தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது . ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம்.
ஒண்ணுக்கே… இதுல யுகங்கள் தோறுமா?

ஒன்று நிச்சயம் இத்திரைப்படத்துறையன்றி எத் துறையானாலும் அதில் முஸ்லிம்கள் முழுமையாக கால்ப்பதிக்காதவரை இதுபோன்ற பாப்பான்கள் தொடர்ந்து ஆடத்தான் செய்வார்கள்.

Inspiring example from ஹோப்












Oct 2, 2009

இதுதான் கம்ப்யூட்டர் சாப்ட்வர் உலகம்

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

" அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

சரி""இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்."அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின்முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புதுபொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

காஷ்மீர் மக்களுக்கு தனி விசா: சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்பு


காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது இல்லை என்று குறிப்பிடும் வகையில் காஷ்மீர் மக்களுக்கு தனி விசாவை சீனா வழங்குவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு தில்லியில் உள்ள சீனத் தூதரகம் விசா வழங்கி வருகிறது. ஆனால் அண்மைக்காலமாக சீனா செல்லும் காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் சீனத் தூதரகம் தனியாக விசா வழங்கி வருவது தெரியவந்துள்ளது.

வழக்கம்போல் பாஸ்போர்ட்டில் விசா வழங்காமல் தனி பேப்பரில் விசா வழங்கி வருகிறது சீனத் தூதரகம். காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல; காஷ்மீர் மக்கள் இந்தியர்கள் அல்ல என்பதை மறைமுகமாகச் சொல்லும் வகையில் இவ்வாறு செய்வதாகக் கருதப்படுகிறது.

அருணாசலப் பிரதேசத்திலிருந்து சீனா செல்லும் இந்தியர்களுக்கும் இதேபோன்று தனி பேப்பரில் விசா வழங்கி வருகிறது சீன அரசு. அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் பகுதி என சீனா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தனி விசா வழங்குவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இன ரீதியிலோ அல்லது பிராந்திய ரீதியிலோ இந்தியப் பிரஜைகளுக்கிடையே பாகுபாடு பார்க்கக் கூடாது என்று சீனாவிடம் இந்தியா கூறியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் உள்ள சீனத் தூதரகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று வெளியுறவு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய எல்லைப் பகுதியை சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. காஷ்மீர் எல்லைப் பகுதியில் சீன விமானங்கள் அத்துமீறி பறந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநில பிரஜைகளுக்கு சீனா தனியாக விசா வழங்குவது இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக கண்டனம்: காஷ்மீர் மக்களுக்கு அவர்களது பாஸ்போர்ட்டில் விசா வழங்காமல் தனி பேப்பரில் விசா வழங்கும் சீனாவின் நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மெத்தனமாகச் செயல்படுவது வருந்ததக்கது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.உடனடியாக சீன அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தனி விசா கொடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.