Mar 5, 2011

பட்டணம் முதல் பட்டிக்காடு வரை செல்போன் மயம்!!!

புதுடெல்லி,மார்ச்.6:இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 77.11 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாத நிலவரமாகும். இது தவிர, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடுதலாக 1.89 கோடி பேர் செல்போன் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர்.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவலின் படி கம்பியில்லா தகவல் சாதனம் (செல்போன்) உபயோகிப்போர் எண்ணிக்கை 2.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. செல் போனின் நச்சரிப்பை அனைத்து கொஞ்சம் செல்வண்டின் நச்சரிப்பை கேட்போம் என்ற பாடல் வரிகள் தான் ஜாபகம் வருகிறது.

இதன் மூலம் தரைவழி தொலைபேசி, செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 80.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 2.39 சதவீதம் கூடுதலாகும். மொத்தமுள்ள 77.11 கோடி வாடிக்கையாளர்களில் 54.86 கோடி பேர் மட்டுமே செல்போனை அதிகம் உபயோகிப்பவர்களாவர். மற்றவர்கள் எப்போதாவது உபயோகிப்பதாக தெரிவித்துள்ளது. இணையதளம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 2.70 சதவீதம் அதிகரித்து 1.12 கோடியாக உயர்ந்துள்ளது.

கடமை உணர்ச்சிக்கு வயது வரம்பே இல்லையா?

இந்தியா முன்னேற வேண்டும் என்றால்? இங்கு ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் எல்லா வயதானவர்களுக்கும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இந்தியாவை மாதிரி எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஒரு நாட்டை படித்த இளஞ்சர்கள் ஆட்சி செய்தால்தான் அந்த நாடு உருப்பட்டு முன்னுக்கு வரமுடியும்.

இருக்கிற எம்.பி., எம்.எல்.எ.,அமைச்சர், இப்படி எல்லோரையும் பார்த்தால் ஒன்று ரவுடியா இருகிறார்கள், இல்லையேல் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருகிறார்கள், அப்படி இல்லையேல் கைநாட்டாகவோ நடிகர், நடிகைகளாகவோ இருகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்த நாடு எப்படி? உருப்படப்போகிறது.

அதற்காக வேண்டி பெரியவர்கள் தேவை இல்லை என்று அருத்தம் இல்லை. அவர்களை நல்ல ஆலோசர்களாக பயன்படுதிக்கொள்ளலாம். அதற்க்கு ஒரு சீட்டை இத்தனை வருடமா இருந்து தேய்ப்பது. என்னமோ இந்தியாவை இவர்கள் தலையில் வைத்து சுமப்பது மாதிரி.

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

கற்றவர்கள் நிரப்ப வேண்டும் இல்லையேல் கயவர்கள் நிரப்புவார்கள்!!

அநீதிக்கு எதிராக அனல் வார்த்தைகள் பேசும் சீமானின் பேச்சு, சுய மரியாதையின் அடையாளம். ஈழத்தின் இன அழிப்புக்கு எதிராக உலகெங்கும் ஒலிக்கும் குரல். சிவகங்கை பக்கத்துக் கிராமத்தில் பிறந்த சீமான், நவீன தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?

சிவகங்கை அருகில் அரணையூர் என் கிராமம். வானம் பார்த்த பூமியில் மிளகாயும் நெல்லும் பயிரிட்டு வாழும் எளிய வெள்ளாமைக் குடிகள் நாங்கள். எல்லாவிதச் சாதிய அடக்கு முறைகளும் உயிர்ப்புடன் இருந்த கிராமத்தில், ஊரின் நடவடிக்கைகள் எனக்குள் ஏராளமான கேள்விகளை உருவாக்கின.

கண்மாய்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எங்கள் ஊரில், அதே கண்மாயில்தான் குளிப்பார்கள். கண்மாயின் ஓர் இடத்தில் ஒரு கல் போடப்பட்டு இருக்கும். அங்கு ஒரு சாதியினர் குளிப்பார்கள். கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் இன்னொரு கல். அங்கு வேறொரு சாதியினர் குளிக்க வேண்டும். இப்படி, சாதிக்கு ஒரு கல் போட்டுக் குளித்த கண்மாய், சாதியின் கொடூரத்தை எனக்குப் போதித்தது.

இன்னொரு பக்கம், ஊர் எல்லையில் இருந்த காவல் தெய்வத்தை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக தினமும் கொஞ்சம் பேர் இரவில் காவல் காப்பார்கள். 'மக்களைக் காக்க வேண்டிய காவல் தெய்வத்தையே நாம் காக்க வேண்டியிருக்கிறது என்றால், அப்புறம் என்ன அது காவல் தெய்வம்?' என்று இயல்பாகவே கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விகள் என்னை பெரியாரிடம் கொண்டுசேர்த்தன. ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியலே இங்கு வெற்றிடமாக இருக்கிறது. தமிழக அரசியல் வெற்றிடத்தைக் கற்றவர்கள் நிரப்ப வேண்டும். இல்லை என்றால், கயவர்கள் நிரப்புவர் என்று கூறினார் சீமான்.

அருகம்புல்லும் அதன் மருத்துவ குணமும்!!

சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.

ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

ஈழ தமிழர்களுக்கு செய்த தூரோகம்!! நிர்கெதியில் திமுக!!!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க., நேற்று அறிவித்தது. எதிர் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வும், காங்கிரசும் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், உடன்பாடு காண முடியவில்லை.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை, 60 இடங்கள் கேட்டு, அதற்கு தி.மு.க.,வும் ஒப்புக் கொண்ட பிறகு, தற்போது, 63 இடங்கள் வேண்டும் என்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பர் என்பதும், இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க., தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து, மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இடம் பெற விரும்பாமல், தி.மு.க., தன்னை விடுவித்துக் கொண்டு, பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவை இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு எடுத்துள்ளது.முதல்வர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் அழகிரி உட்பட, 28 பேர் கலந்து கொண்டனர்.தி.மு.க.,வின் அறிவிப்பை அடுத்து, கடந்த ஏழாண்டு காலமாக அந்தக் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே தொடர்ந்த உறவு முறிந்துள்ளது.

சிந்திக்க: மூன்று தொகுதிகளுக்காக கூட்டணியை முறித்த கருணாநிதி அன்று ஈழ தமிழர்களை கொல்லும் போது இதை செய்திருந்தால் இவர் உண்மையிலே தமிழர் தலைவர் என்று வரலாறு பதிந்திருக்கும். இப்பொது தமிழர்களின் ஆதரவை இழந்து நம்பி இருந்த காங்கிரஸ் காலைவாரிவிட்டது அந்தோ பரிதாபம். கருணாநிதிக்கு தோல்வி நெருங்கி விட்டது தமிழர்களுக்கு செய்த துரோகம் இப்ப இரண்டும் கெட்டான் நிலை.

வறுமையின் நிறம் சிவப்பு இல்லை இறப்பு!!!

விழுந்துவிட்ட விவசாயம், பஞ்சாலைத் தொழில், நலிவடைந்து போன சிறு வணிகம், வேலையிழப்பு என்று தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கடும் பஞ்சம் நிலவுகிறது. கடனிலிருந்து மீள உணவுக்காக என கந்து வட்டிக்கு வாங்கும் கடன் கழுத்தை நெறித்து குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3,000 -க்கும் மேல்.

என்னை மிகவும் பாதித்த நிகழ்வு சேலம் காரியப்பட்டியைச் சார்ந்த ஜெயலட்சுமியின் கதைதான். அவர் வறுமை காரணமாக குள்ளம்பட்டியில் உள்ள குளத்தில் தனது மூன்று குழந்தைகளையும் வீசி விட்டு அவரும் குதிக்கிறார். மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட ஜெயலட்சுமி உயிர் தப்பி விடுகிறார்கள். இப்போது அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினீல் வெளி வந்திருக்கிறார்.

வறுமைக்குள் மூழ்கடிப்பட்ட ஏழைகளை குறிவைத்து நடத்தப்படும் கிட்னி திருட்டுக்குப் பின் இப்போது குறைவான முதலீட்டில் கொள்ளை லாபம் பெறும் வியாபாரமாய் உருவாகியிருப்பது ஏழை பெண் குழந்தைகளை கடத்தி விற்பதுதான். சில மாதங்களுக்கு முன்பு கிரிஜா என்னும் பெண் கடலூர், புதுவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் 10,000ரூபாய் மட்டுமே கொடுத்து பல குழந்தைகளை வாங்கி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் வரை வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு பணக்கார எஜமானர்களுக்கும் விற்றுள்ளார்.

ஈராக்கில் மக்கள் புரட்சி!!

பாக்தாத்,மார்ச்.5:அரசு விதித்துள்ள தடையை மீறி ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாதின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தியதால் மக்கள் பல மணிநேரங்கள் நடந்து வந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ஈராக்கின் நஜஃபிலும், துறைமுக நகரமான பஸ்ராவிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பஸ்ரா மாகாண தலைமையகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கடந்தவாரம் மாகாண ஆளுநர் ராஜினாமாச் செய்திருந்தார். மாகாண கவுன்சிலை கலைக்க வேண்டுமெனவும், தேவையான சேவைகளை அளிக்கவேண்டுமெனக் கோரி நேற்று மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் 17 நகரங்களில் போராட்டம் நடைபெற்றன.

Mar 4, 2011

பக்தி என்ற பெயரிலே புரோகிதம் வளர்க்கும் தினமலர்!!

மார்ச்:5, நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார்.

இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார்.( செய்திகள்: தினமலர்).

சிந்திக்கவும்: எங்கே இந்த நாடு உருப்பிட போகுது. இந்த புரோகித பார்ப்பன தினமலரின் மூட நம்பிக்கையை பாருங்கள். இதை ஒரு செய்தியாக பெரிய படத்துடன் போட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் இப்படியும் மக்களா? அடபாவிகளா! "பாட்டி வடை சுட்டாள் காக்காய் தூக்கிட்டு போயிட்டு" என்று எத்தனை நாளுக்கு கதை சொல்வீர்கள். பக்தி என்கிறபெயரில் இப்படி ஒரு கிறுக்குத்தனம் அதற்க்கு வக்கலாத்து வாங்கும் பார்பன வந்தேறி கூட்டம். இந்த அப்பம் சுட மூன்று மாதம் விரதம் வேறு. அட முட்டாள்களா? செட்லைட்டும், 3 ஜியும், விடியோ கான்பிரன்ஸ் என்று உலகம் எங்கோ போயிகிட்டு இருக்கு இவர்கள் என்னவென்றால்? இன்னும் கற்காலத்தில் இருகிறார்கள்.

தீ மிதிப்பது முதல் லிங்கம் எடுப்பதுவரை, அழகு குத்துவது முதல் திருநீறு வரவழைப்பது வரை எல்லா வித்தைகளையும் திக காரர்கள் செய்து காட்டிவிட்டார்கள், இருத்தும் நீங்கள் திருந்தமாட்டீன்களா? இதை ஒரு அற்புதம் மாதிரி இந்த தினமலர் மோடிவித்தைகாரர்கள் செய்திபோட்டு ஹிந்துத்துவா வை வளர்கிரார்களாம். ஏன்? எல்லா சாமியாரும், பூசாரியும், திருநீறும், லிங்கமும், தீசட்டியும் இப்படி பழசையே செய்கிறார்கள். அமெரிக்காகாரன் ராகெட் உட்டான் என்றால்? உங்கள் பார்பன புரோகிதர்கள் அட்லீஸ்ட் ஒரு தட்டையாவது பறக்க விடட்டுமே. என்னங்கடா மாய்மாலம் பண்றீன்கள். இதை தினமலரின் பார்பன புரோகித வளர்ப்பு சித்தாந்தமாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்

இனி கம்ப்யூட்டர் உங்களோடு பேசும்!!

இதுநாள் வரையில் மவுனமொழியாக கம்ப்யூட்டருடன் பேசிக் கொண்டிருந்த நாம் இனிவரும் காலங்களில் நமக்கு தெரிந்த மொழிகளில் பேசி பழகலாம். அதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இதற்கான முயற்சியை சி-டாக்(சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் என்ற அமைப்பு எடுத்து வருகிறது. இவை இரண்டு முறைகளில் செயல்பட உள்ளது.ஸ்பீச் டு டெக்ஸ்ட் முறையிலும் டெக்ஸ்ட் டு ஸ்பீச் முறையிலும் செயல்பட உள்ளது. இதற்காக பயனாளிகள் கம்ப்யூட்டர் முன்னர் உட்கார்ந்து பேசும் போது அக் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர்கள் பேச்சை டெக்ஸ்ட்டாக மாற்றி தேவையான தகவல்களை திரட்டிய பின்னர் மீண்டும் அவை பேச்சாக தெரிவிக்கின்றன.

கேப்டனுக்கு அடித்தது ஜாக்பெட்டு!!

சென்னை, மார்ச் 4: அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தேமுதிக.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே வெள்ளிக்கிழமை இரவு கையெழுத்தானது. கடந்த பிப். 24ம் தேதி தேமுதிகவினர் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சு சுமுகமாக முடிந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் விஜயகாந்த் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. இதன் பிறகு தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது.

சட்டம் தன் கடமையை செய்யுமா?

சட்டம் தன் கடமையை இப்பொழுதாவது சரி வர செய்யும்மா? என்று உலகமே! எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. பாபர் மசூதி இடிப்பு அத்வானிக்கு நோட்டீசு சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

புதுடெல்லி, மார்ச். 4-உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. அயோத்தியில் குவிந்து இருந்த கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தனர். அவர்களை பா.ஜ.க. தலைவர்கள் தூண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

கரசேவகர்களிடம் மத உணர்வை தூண்டி விட்டு பாபர் மசூதியை இடிக்க செய்தனர் என்று பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. ரேபரேலியில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அத்வானி மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்த ரேபரேலி கோர்ட்டு சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அலகாபாத் ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. ஆனால் ஐகோர்ட்டும் சி.பி.ஐ.யின் மனுவை நிராகரித்தது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. தலைவர்கள் சதி செய்துள்ளதாக கூறி சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீதான விசாரணைக்கு பதில் அளிக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரேக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புதிய வேகம் ஏற்பட்டுள்ளது.

25 பைசாவுக்கு குட் பை!!

டெல்லி,மார்ச்.4:நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25.காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ஒரு காலத்தில் ஒரு காசு, 2 காசு, 5 காசு, 10 காசு என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். இவற்றை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. தற்போது 25 காசு, 50 காசு ஆகியவை மட்டும் புழக்கத்தில் உள்ளன. இதில் 25 காசு நாணயத்தையும் புழக்கத்திலிருந்து நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி ஜூன் 30ம் தேதியுடன் 25 காசு நாணயத்தை நிறுத்தவுள்ளனர். அதற்குப் பிறகு இந்த காசு செல்லாததாக அறிவிக்கப்படும். அதன் பிறகு இதை எங்கும் பயன்படுத்த முடியாது. எனவே அதற்குள் 25 காசுகளை வைத்துள்ளவர்கள் அவற்றை வங்கிகளில் மொத்தமாக கொடுத்தால் அதற்கு நிகரான தொகையை வங்கிகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஒருவரிடம் ஒரே ஒரு 25 காசு மட்டும் இருந்து, அதை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்கு ஈடாக என்ன தொகை தருவார்கள்?

குடியுரிமையை பாதுகாக்கவேண்டிய நிலையில் மக்கள்!!

புதுடெல்லி,மார்ச்.4:குடியுரிமைகளை பாதுகாப்பதற்கான டெல்லியில் நடந்துவரும் ஒருவார கால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர்மந்தரில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பேரணி நடைபெற்றது. டாக்டர் பினாயக் சென்னை விடுவித்தல், கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறுதல், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்தல், பாட்லா ஹவுஸ் போலி மோதல் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி, அலிகர், ஜாமிஆ மில்லியா ஆகிய பல்கலைக் கழகங்களில் கருத்தரங்கங்களும், இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்தியாவில் மக்களின் குடியுரிமைகளை பாதுகாப்பதற்காக மாணவர் சமூகம் களமிறங்க வேண்டுமென ஜந்தர்மந்தரில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்ட கேம்பஸ் ஃப்ரண்டின் டெல்லி மாநிலத் தலைவர் ஆலம் அஃப்தாப் உரைநிகழ்த்தினார். தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது அனீசுர் ரஹ்மான் இப்பேரணியில் பங்கேற்றார்.

Mar 3, 2011

இந்திய ஊடகங்களா? இந்துத்துவா கேடயங்களா?

கசாப் என்ற பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப். சரி இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகன் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட அந்தப் பெயரும், அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.

2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 68 பேர் உயரிழந்தனர். 68 அப்பாவி பொதுமக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டது ‘இந்து’ தீவிரவாத அமைப்புகள். அந்த ‘இந்து' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்தான் சாத்வி பிரக்யா என்பவரும், அவரது கூட்டாளியான சுனில் ஜோஸி என்பவரும். ‘இந்து’ தீவிரவாதம் என்கிற வார்த்தையே நம் மக்களுக்கு புதிய சொல்லாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்து தீவிரவாத அமைப்பு, இந்து தீவிரவாதிகள் போன்ற செய்திகளை நமது ஊடகங்கள் நமக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொல்ல விரும்புவதுமில்லை. எழுத்து ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சினிமா என மக்களிடம் நேரடியாக பேசும் எந்த அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பற்றி மக்களுக்கு துளி அளவும் சொன்னதில்லை. அதே நேரத்தில் இசுலாமிய தீவிரவாதம், தீவிரவாதிகள் என்றாலே இசுலாமியர்கள் என்கிற சித்தரிப்பை ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

ஊடகம் என்பது இந்திய அளவில் பார்ப்பன, பனியாக்களின் தலைமையில் செயல்படும் அமைப்பாகவே இருக்கிறது. இந்திய வல்லாதிக்க கூறுகளான, தமிழ் இனம் போன்ற தேசிய இனங்களின்' மீதான ஒடுக்குமுறை, இசுலாமியர்கள் மீதான பொய் சித்தரிப்பு, தரகு தேசிய முதலாளிகளுக்கான ஆதரவு மனநிலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தியல், பிராந்திய உணர்வுகள் கொண்ட மாநில கட்சிகளை சிறுமைப்படுத்துதல் என அனைத்து கருத்தாக்கங்களையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத்தான் தினமலர், தினமணி, தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, இது போன்ற ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. சமூக நீதிக்கு முரணான இந்திய தேசிய கட்டமைப்பை, இந்துத்துவா உணர்வை, இந்தி மொழி திணிப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது புத்தியாக உருவாக்கும் அரசியலைத்தான் இந்த ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு போன்ற தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது, பழனிபாபா படுகொலை என இந்துத்துவா அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை இதுவரை எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. 1984-ல் விஷ்வ இந்து பரிஷத் என்கிற ஹிந்து தீவிரவாத அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு தான் இந்திய அளவில் மதக்கலவரங்களும், வன்முறை தாக்குதல்களும் அதிகமாக பரவலாகின. குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை இந்நாட்டில் துவங்கி வைத்த இந்த்துவ பார்ப்பனிய அமைப்புகளை தீயசக்திகள் என்கிற பிரச்சாரத்தை எந்த ஊடகங்களும் செய்ததில்லை. தீவிரவாத அமைப்புகள் என்றால், தமிழ் இன, தேசிய இன விடுதலை அமைப்புகள், மற்றும் இசுலாமிய அமைப்புகள்தான் என்பதை பொதுமக்கள் மத்தியில் ஆழமாகப் பதிவு செய்வதில் அதிகமான பங்கை இந்த ஊடகங்கள் வகிக்கின்றன.

நன்றி : ஜீவசகாப்தன், நன்றி: கீற்று.

அட இந்த சாமியார்களுடைய அட்டுழியம் தாங்கலப்பா!!!

சாமியார்களைதான் பார்த்து பயந்து இருந்தோம் ஆனால் இப்பொழுது சாமியார் மாதிரி வருபவர்களையும் பார்த்து பயப்பட வேண்டியுள்ளது! நம் நாட்டில்தான் கைவரிசையை காட்டி கொண்டு இருந்தார்கள் இப்பொழுது பக்கத்துக்கு நாட்டையும் விட்டு வைக்கைவில்லை!!!

கொழும்பு: இலங்கையில் 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்து சாமியார் போல் வேடமிட்டு கொள்ளையடித்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக கொழும்பு போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த இருவரிடமும், 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கிராண்பாஸ் போலீஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடங்க மறுப்போம் அத்துமீறுவோம்!!

சிந்திக்கவும்! "இணையதள வாசகர்களே உங்கள் அன்பான விமர்சனத்திற்கு" நன்றி கூறியவனாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. என் ஆக்கங்களை தொடராக படித்து வரும் வாசகர்களுக்கு இப்போது மனதில் ஒரு கேள்வி எழலாம். அது என்ன வென்றால்? நம் நாட்டில் நமக்காக நன்மை செய்த ஒரு தலைவருமே இல்லையா? என்ற கேள்வி எழலாம், அதற்கு பதில் இருந்தார்கள், ஆனால் இந்த பாசிச வந்தேறி மதவெறியர்கள் அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அது எப்படி? என்று பார்ப்போம்.

முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 1927இல் தான் இந்த வந்தேறிகள், வஞ்சகர்களின் கூடாரமான "ஹிந்து மகாசபை என்ற ஆர் எஸ் எஸ்ஸின் தாய்கலகம்" கலவரம் நடத்துவதற்காக மட்டுமே தொடங்கப்பட்டது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், என எல்லோரும் ஒற்றுமையாக ஒரே அணியின் கீழ் நின்று "சுதந்திரம் ஒன்றே உயிர் மூச்சு என்று போராடும் போது இவர்கள் மட்டும் தனியாக பிரிந்து ஹிந்துத்துவா வேஷம் போட்டுக்கொண்டு சுதந்திர போராட்டத்தை நடத்தி கொண்டிருந்த மக்களை வெள்ளையர்களுக்கு காட்டிக்கொடுத்தார்கள். ஒற்றுமையாக இருந்த ஹிந்து, முஸ்லிம் சகோதரர்கள் மனதில் மத துவேசத்தை வளர்த்து கலவரங்களை நடத்தி இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்க காரணமாக இருந்தார்கள்.

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒன்றை நினைவு படுத்துகிறேன் நீங்கள் ஐந்தாம்
வகுப்பு, ஆறாம் வகுப்பு, படிக்கும் போது வரலாறு பாடத்தில் படித்திருப்பீர்கள் ஆரியர்கள் வருகை என்று அதை இந்த இடத்தில் ஞாபக படித்துக் கொள்ளுங்கள். இவர்கள் வந்தேறிகள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தது. பிற்காலத்தில் அந்த பாட நூல்களில் உள்ளதை தங்களுடைய வஞ்சக தன்மையினால் மாற்றிவிட்டார்கள் .இந்தியா பாகிஸ்தான், பிரிந்த போது இவர்களின் சதி திட்டத்தை உணர்ந்து நிறைய நல்ல உள்ளங்கள் வருத்தப்பட்டன. அதில் முக்கியமானவர்தான் தேசபிதா அன்பின் சின்னம் மகாத்மா காந்தி அவர்கள். எங்கே இவர் இருந்தால் பிறிந்த இரு நாடுகளும் ஒன்றாக ஆகிவிடுமோ? என்று பயந்த இவர்கள் மகாத்மா காந்தி அவர்களை கொன்றார்கள்.

பாபா அம்பேத்கார் அவர்கள் சமுகம், அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு, கோயிலில் இறைவனை தொழுதல் இவற்றில் எல்லா மக்களுக்கும் சமஉரிமை வேண்டும் என்று சொன்னார். இதை இந்த பார்பன வந்தேறிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தோ! பரிதாபம் அதனால் அவர் மனம் வெறுத்து ஹிந்து மதத்தில் இருந்தே போய்விட்டார். "தலித், முஸ்லிம், கிறித்தவர்கள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றம், அவர்களின் ஒற்றுமை" என்றாலே இவர்களுக்கு பிடிக்காது. அதை பற்றி பேசுபவர்களை, எழுதுபவர்களை உடனே கொன்று விடுவார்கள், இல்லை என்றால்? வீண் பழி சுமத்தி சிறையில் தள்ளுவார்கள். இல்லையேல் இந்த ஒற்றுமையை திசை திருப்ப நாட்டில் ஹிந்து, முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ணுவார்கள்.

வி பி சிங் அவர்கள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு, பின்தங்கிய மக்களுகாக எல்லா கட்சிகளையும் காங்கிரசிற்கு எதிராக ஒன்று திரட்டி, இந்த பார்பனர்களின் கட்சி உள்பட தேர்தலை சந்தித்து வெற்றிவாகை சூடி ஆட்சியில் அமர்ந்தார். இவர் உயர் ஜாதியை தவிர எல்லா கீழ் நிலையில் உள்ள ஜாதி மக்களுகாக மண்டல் கமிஷன் என்ற ஒன்றை கொண்டுவந்தார். இந்த மண்டல் கமிசன் என்பது டாக்டர் பாபசாஹிப் அம்பேத்கர், காந்திஜி ஆகியோரின் கனவு இதை நினைவாக்க வி பி சிங் புறப்பட்டார். இதோ நேரம் இந்த பாசிச ஹிந்துத்துவாவினரும் புறபட்டர்கள் பெட்ரோல் கேன்களை எடுத்து கொண்டு. இவர்களுக்கும் பெட்ரோலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு அதை நீங்கள் குஜராத் கலவரத்தின் பொது பார்த்திருப்பீர்கள். அவர்கள் எப்படி உயிரோடு எரித்து கொல்வார்கள் என்று.

பாவப்பட்ட மாணவர்களின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றார்கள். இப்படி இவர்களே எரித்து கொன்று விட்டு உயர் ஜாதி மாணவர்கள் இந்த மண்டல் கமிஷன் என்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள இடவுதுக்கீட்டை எதிர்கிறார்கள் என்ற கருத்தாக்கத்தை இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கூட்டமும், அதன் உயர்ஜாதி பார்பன பத்திரிக்கைகளும் பரப்பி விட்டன. ஆனால் இதை திட்டமிட்டு செய்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான எ.பி.வி.பி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது ஒன்றும் உயர்ஜாதி மாணவர்களை இல்லை.

இத்தோடு இவர்கள் வெறி அடங்கவில்லை தொடங்கினார்கள் "ரத யாத்திரை என்ற ரத்த யாத்திரையை" ரத்த ஆறு ஓடியது. முலாயம் சிங்க் என்ற ஒரு ஆண் மகான் அவர்களை தடுத்தான் வீழ்ந்தது. ஆட்சி. வி பி சிங் என்ற நமக்காக குரல் கொடுத்த மாமனிதன் அந்த ஏக்கத்திலே உயிரை விட்டார் . அதோடு மூட்டை கட்டி விட்டார்கள் நம் முன்னேற்றத்தை. இதோ இப்பொழுது டாக்டர் பினாயேக்சென் என்ற மகத்தான மனிதன் வந்தார் அவர் செய்த குற்றம்தான் என்ன? மனித உரிமை போராளியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுகாக குரல் கொடுத்தார். இதுதான் இவர் செய்த குற்றமா? இதற்குத்தான் இவர்கள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்களா?. என்ன நடக்குது இந்த நாட்டில், பாசிஸ்டுகள் இந்த நாட்டில் இருந்தால் நம் முன்னேற முடியாது. சிந்தியுங்கள்! அப்படி என்றால் நாம் என்ன? செய்திட வேண்டும். வீறுகொண்டு எழுவோம் பாசிச பார்பன விரோதிகளை விரட்டுவோம்!!

வாசகர்களின் அன்பான கவனத்திற்கு நாம் படிக்கும் நல்ல செய்திகளை அடுத்தவர்களுக்கும் பரப்புங்கள் கருத்துகள் தான் புரட்சிகளை எற்படுத்தும் .படியுங்கள் பரப்புங்கள் .....................முரசு முழங்கிக்கொண்டே இருக்கும்.

இவர்கள் மனம் என்ன? இரும்பால் படைக்கப்பட்டதா?

கடலூரைச் சார்ந்த செல்லப்பன், அஞ்சலையின் 11 வயது குழந்தை தனலெட்சுமி என்னும் தனம் வறுமை காரணமாக ரூபாய் இருபதாயிரத்திற்கு கேரளாவைச் சார்ந்த வக்கீல் குடும்பத்திற்கு வீட்டு வேலைக்காக விற்கப்பட்டிருக்கிறார். வக்கீல் ஜோஸ் குரியனும் , மனைவியான சிந்து என்பவரும் சேர்ந்து குழந்தை தனலெட்சுமியை நாய்க் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். சிறுமி தனத்தை பல நாட்கள் நிர்வாணமாகவே அடைத்து வைத்து உதைத்தும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

கடந்த வியாழன் அன்று ஆலுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி தனம் அன்றே மருத்துவமனையில் இறந்தும் போயிருக்கிறாள். உடல் முழுக்க தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தனத்தின் உடல் ஆலப்புழா மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட போது உடல் முழுக்க எண்பது வகையான காயங்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் மருதுவர்கள். வயிற்றில் காயங்கள், தீக்காயங்கள், சிகரெட்டால் சுட்டவடுக்கள், முதுகில் காயங்கள், என கொழுப்பெடுத்த சைக்கோ தம்பதிகளிடம் ஏழை தனம் சிக்கிக் கொண்டாளோ என்னவோ?

வெள்ளிக்கிழமை IPC 302 (கொலை வழக்கு)இன் படி பதிவு செய்து குரியனையும், சிந்துவையும் கைது செய்திருக்கிறது போலீஸ். தனத்தின் சித்திரவதையான இந்தப் படுகொலையைக் கண்டு மனம் பொறுக்காத ஆலுவா மக்கள் குரியனையும், சிந்துவையும் தாக்கப் பாய்ந்திருக்கிறார்கள். இவர்களை போன்ற கொடியவர்களை அரசு உடனே தூக்கில் இடுமா? எங்கே செய்யபோகிறது நமது நீதித்துறைதான் கயவர்களின் கூடாரமாயிற்றே. விட்டதே.

கோத்ரா மறு நீதிவிசாரணை தேவை!! பிரசாந்த் பூஷண்!!

புதுடெல்லி,மார்ச்.3:கோத்ரா ரெயில் எரிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டுமென பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 31 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு 62 பேர் விடுதலைச் செய்யப்பட்ட சூழலில் பிரசாந்த் பூஷண் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இது மோடி அரசின் நீதியற்ற கமிஷன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தீர்ப்பு. இதில் ஏந்த விதமான அறிவியல் ஆதாரங்களும் சமர்பிக்கப்படவில்லை. மத்திய அரசால் போடப்பட்ட கமிசனில் இருந்து முக்கிய அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு இப்படி அமைந்தால்தான் இதை வைத்து நடத்திய கலவரத்தை நியாப்படுத்த முடியும் என்பதே மோடியின் எண்ணம் என்றும் கூறினார்.

தவறான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தவறான தீர்ப்பை கோத்ரா சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது என பிரசாந்த் பூஷண் கூறுகிறார். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடுச் செய்ய முடியுமென்றாலும், கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைக் குறித்து ஒரு மறுவிசாரணை நடத்தவேண்டும். தவறான சூழலில் எழுந்த வழக்கு இது. மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீது தீவைப்பு குற்றம் சுமத்தியதில் ஒரு நியாயமுமில்லை. அது போதாது என அவர்கள் மீது கொலைக் குற்றமும், சதித்திட்டம் தீட்டிய குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.' என பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

Mar 2, 2011

புகழேந்தி மாஸ்டர் தலைமையில் புதிய யுக்திகள்!!

மீண்டும் தமிழீழ போராட்டத்தை மீள் காட்டியமைக்கும் பணிகளின் ஒரு கட்டமாக விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான புகழேந்தி மாஸ்டர் தலைமையில் பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டில் பல ரகசிய முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிரபயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீக்கிரம் சிங்கள பேரினவாத பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் படித்து கொடுக்கப்படும் என்ற செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. தனி தமிழீழம் என்பது நமது உரிமை மட்டும் அல்ல நமது இலட்சியமும் கூட. இதை எதிர்க்கும் தடைககள் எல்லாம் "தவிடு பொடி" ஆக்கப்படும். தனி தமிழீழம் நமது இலட்சியம் என்பதனை ஒவ்வொருவரும் நினைவில் கொள்வோம்.

நன்றி: உலகத்தமிழர் பாதுக்காப்பு படை. (மின்னஞ்சல் செய்தி ).

இவர்கள் படித்தது சட்டப்புத்தகமா? மனுதர்மமா?


அன்பார்ந்தவர்களே சிந்திக்கவும்: நம் நாட்டிலே கேள்வி கேட்க முடியாத இரண்டு நபர்கள் உண்டு, ஒன்று ஜனாதிபதி, மற்றொன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. இதில் மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்டின் அவலங்களை பற்றி இன்று பாமரன் கூட மதிப்பு குறைந்த வார்த்தைகளால் விமர்சிக்க தொடங்கி விட்டான். ஏன் இந்த இழி நிலை? அதற்கு காரணம் இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான "நீதி துறை" இன்று உயர் ஜாதிகாரர்களின் பிடியில் அகப்பட்டு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டதுதான் காரணம். அதற்க்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.

1) நாட்டையே உலுக்கிய "போபால் விஷவாய்வு துயரம்" இதில் ஆயிரக் கணக்கில் மக்கள் இறந்தார்கள் இன்றும் அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது.

2) மும்பை கலவரம் அதற்க்கு காரணம் பயங்கரவாதி பால்தாக்கரே என்று கோர்ட் கூறியும் அவனை ஜெயிலில் அடைக்க முடியவில்லை. என்மேல் கைவைத்தால் "இந்தியாவே பத்தி எறியும்" என்று கூறி நீதித்துறையும், அரசையும் கேவலப்படுத்திய பால்தாக்ரேயை நீதியின் முன்னால் நிறுத்த முடியவில்லை.

3) பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்காற்றிய குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக்சிங்கால், உமாபாரதி, போன்ற பயங்கரவாதிகள் இன்றும் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். "ரதயாத்திரை என்ற பெயரிலே ரத்த யாத்திரை" நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு தூக்கு இல்லை.

4) ஒரிசாவில் "பாதிரியாரையும் அவரது பச்சிளம் குழந்தைகள் இரண்டையும்" தூங்கி கொண்டு இருக்கும் போது தீயிட்டு கொளுத்திய கயவர்களின் தண்டனையை குறைத்து தீர்ப்பு கொடுத்துள்ளார்கள்.

5) "கர்நாடகாவில் சுர்சுகளுக்கு தீ வைத்தவர்களை" ஆதாரம் இல்லையென்று சொல்லி நியாப்படுத்தினார்கள்.

7) "கோயம்பத்தூர் கலவரத்தில்" ஈடுப்பட்டவர்கள் இன்றும் அடுத்த கலவரம் செய்வதற்கு தங்களை தயார் படுத்தி கொண்டு தைரியமாக உலா வருகிறார்கள் .

8) "மாவீரன் கர்கரேயே கொன்றவர்கள்" இந்த தேசத்துரோகிகள் தான் என்று தெரிந்தும் அவாள்களை ஒன்றும் செய்ய முடியவில்லை,

9) ஒரிசாவில் "கிருத்துவ மத குருமார்களை கொன்றவர்கள்", "கன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்கள்","கிருத்துவ தேவாலயங்களை எரித்தவர்கள்" இதுவரை நீதியின் முன்னே நிறுத்தப்படவில்லை. யாருக்கும் "தூக்கு தண்டனை" கொடுக்கப்பட வில்லை.

இந்தியாவில் இதுவரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளும் காரணம் இந்த வந்தேறிகளால் தான் என்று குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்த பிறகும், அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்று சந்தேகம் இல்லாமல் நிரூபணம் ஆகியும் "இதுவரை அதன் தலைவர்கள் கைது" செய்யப்படவில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்? நாம் எல்லாம் இன்னும் நம்பிக்கை வைத்திருகின்ற சுப்ரீம் கோர்ட் இது விசயத்தில் இன்றுவரை உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்பதுதான்.

இது ஒரு பக்கம் என்றால், சாமானிய மக்கள் விசியத்தில் இந்த கோர்ட் என்னதான்? செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் எந்த வித தொடர்பும் இல்லாத அப்துல் நாசர் மதனியை பத்து வருடமாக ஜெயிலில் அடைத்து வைத்தார்கள். இவரை குற்றவாளி இல்லை என்று கூறி "உலக மகா அற்புத தீர்ப்பை கூறினார்கள்". மீண்டும் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் அடைத்து "மீண்டும் அந்த மகா அற்புதத்தை அரங்கேற்ற" (ஜாமீன் கொடுக்காமல்) காத்து கொண்டு இருக்கிறார்கள்.

தொடர் குண்டுவெடிப்பை "ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் நிகழ்த்தினார்கள்" என்று தெளிவான பின்னாலும் அந்த "வழக்குகளில் அநியாயமாக பழி போட்டு ஜெயிலில் அடைப்பட்டு கிடக்கும் நம் அப்பாவி சகோதரர்களை" குற்றவாளிகள் இல்லை என்று தெரிந்தும் அவர்கள் விடுதலை விசயத்தில் தலையிடாமல் இன்றுவரை மவுனம் காத்து வருகிறார்கள். மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயுக்சென் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து அநியாயமாக ஜெயிலில் அடைத்து இதை "உலகமே எதிர்த்த போதும்" கண்டு கொள்ளாமல் இருந்து இந்த வந்தேறிகள் நம் நாட்டை கேவலப்படுத்தி இருகிறார்கள்.

பாப்ரி மஸ்ஜித் விசயத்தில் "உலகமே காறித்துப்பும் ஒரு அற்புதமான தீர்ப்பை கூறி" இந்த நாடு எப்படி? கேவலப்பட்டால் எங்களுக்கு என்ன? என்று இந்த வந்தேறிகள் தங்கள் புத்தியை காட்டினார்கள். இது எப்படி போனால் என்ன? பெருமை சேர்பதற்கு இது என்ன அவர்கள் நாடா? இறுதியாக ஒன்று மட்டு புரிகிறது "டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டதிட்டம் எழுதிய காரணத்தால்" பாபாஜியின் மக்களை தீண்டத்தகாத மக்களாக ஆக்கியது போல், அவர் எழுதியதையும் "தொட்டால் தீட்டு பட்டுவிடும்" என்று எண்ணி மக்களை பிரித்தால சொல்லிக் கொடுக்கும் "அவாள்களின் வேதபுத்தகம் ஆன மனுதர்மத்தின்" அடிப்படையில் தீர்ப்பு சொல்கிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது .

அப்படி சொல்லக்கூடிய "அவாள்களின் தீர்ப்பும், நீதிமன்றங்களும்" இனியும் நமக்கு தேவையா?சிந்தியுங்கள்! செயல் படுங்கள்! அநீதிக்கு எதிராக வீறுகொண்டு எழுவோம்! தேசத்துரோகிகளை விரட்டி அடித்து தாய் மண்ணையும், மண்ணின் மைந்தர்களையும் காப்பாற்றுவோம்! இவர்களை வெளியேற்றும் வரை முரசு முழங்கிக் கொண்டே இறுக்கும்! ......உங்கள் அன்புள்ள முரசு.

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை!!

திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. கொமுக வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கொமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை பாமக 31, விடுதலை சிறுத்தைகள் 10, கொமுக 7, முசுலீம் லீக் 3, மூமுக 1 என மொத்தம் 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முசுலீம் லீக் உட்பட 4 வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எனவே திமுகவுக்கு 4 தொகுதிகள் உறுதியாகியுள்ளது. 234 ல் 52 போக மீதம் உள்ள 182 தொகுதிகளை தான் காங்கிரசு மற்றும் திமுக பிரித்துக்கொள்ள வேண்டும். திமுக கடந்த தேர்தலை போல 132 (+4=136) தொகுதிகளில் போட்டியிட்டால் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யலாம் என தெரிகிறது.

வெடித்து சிதறிய விமானங்களின் மதிப்பு 15 மில்லியன்!!

மார்ச்,3: சில தினங்களுக்கு முன் வானத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவை சந்தித்த சிறீலங்கா வான்படையின் இரு கிபீர் விமானங்களின் பெறுமதி 15 மில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. நேற்று அழிவை சந்தித்த இரு விமானங்களும், வன்னியில் நடைபெற்ற பேரில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளை அழிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா வன்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் விமானங்கள் சாம்-7, சாம்-14 வகையான இலகுவாக தோளில் சுமந்து செல்லப்படும் சிறிய ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து தப்பக்கூடியவை.

வன்னியில் நடைபெற்ற போர்களில் மூன்றாவது மற்றும் நான்காவது ஈழப்போர்களில் விடுதலைப்புலிகளின் ராதா வான்காப்பு படையணி மேற்கொண்ட சாம்-14 ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து இரு தடவைகள் கிபீர் ரக விமானங்கள் தப்பியுள்ளன. எனினும் தாழ்வாக பறந்த கிபீர் விமானம் ஒன்று நான்காவது ஈழப்போரில் வான்காப்பு படையினரின் விமான எதிர்ப்பு பீரங்கி தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்திருந்தது. அதில் இருந்து வீழந்த பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீழ்ந்திருந்தன.
மேலும் கட்டுநாயக்கா வான்படை தளம் மீதான தாக்குதலின் போது கிபீர் விமானங்கள் சேதமாக்கப்பட்டதுடன், இதற்கு முன்னரும் இரு கிபீர் விமானங்கள் விடுதலை புலிகளால் சுட்டு வீழ்த்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்ரா: நீதியைப் பரிகாசம் செய்த தீர்ப்பு!

கோத்ராவில் நிகழ்ந்த அந்த கோர சம்பவம் இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படு கொலைக்கு காரணமாக அமைந்தது. கோத்ராவில் நிகழ்ந்தது விபத்தே தவிர சதி செயல் அல்ல என நீதிபதி பானர்ஜி கமிஷன் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. ஆனால் முஸ்லிம்கள் என்றால் மட்டும் நீதியினை மறுக்கும் தங்கள் நீதி பரிபாலனத்தை தவறாமல் செய்தன. கோத்ரா ரயில் வழக்கில், 31 பேர் குற்றவாளிகள் எனவும், 61 பேர் விடுவிக்கப்படுவதாகவும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது நீதி பரிபாலனத்தில் கேலி செய்யும் தீர்ப்பு என சமூகநல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு நீங்கள் இந்த இதழை பார்க்கும்போது வெளி வந்திருக்கக்கூடும்.
சபர்மதி சம்பவத்தின் பின்னணியில் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக குஜராத் அரசு கூறியதை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டவர்களில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் என்று கருதப்பட்ட மவுல்வி உமர்ஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற முக்கியக் குற்றவாளிகளான ஹாஜி பில்லா, ரஜாக் குர்குர் ஆகியோரை குற்ற வாளிகளாக நீதிபதி அறிவித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை 2009ம் ஆண்டு ஜூன் மாதம் சபர்மதி ஜெயிலில் தொடங்கியது. இந்த வழக்கில் 94 பேர் மீது குற்றம்சாட்டப் பட்டிருந்தது. ரயில் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பட்டுள்ளது. மிக அதிக அளவிலான பெட்ரோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரயிலின் எஸ்-6 பெட்டி மீது மிக அதிக அளவில் பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு வழக்கறிஞர் ஜே.எம். பன்சால் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரினீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போதைய சூழலில் இது குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. இருப்பினும் இந்த வழக்கில் வாதிட வேண்டிய அனைத்து அம்சங்களை நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டி, தீர்ப்பு அளிக்குமாறு குறிப்பிட்டதாக அவர் கூறினார். இந்த வழக்கில் மவ்லவி உமர்ஜி குற்றமற்றவர் என நீதிமன்றம் கருதியது. அதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் எந்தக் காரணத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது தீர்ப்பின் முழு விவரம் வெளியாகும் போதுதான் தெரியவரும் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விசாரணையின்போது மொத்தம் 253 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. மொத்தம் 1,500 ஆவணங்கள் சாட்சிகளாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் 134 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் 14 பேர் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். ஐந்து பேர் மைனர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடக்கும்போதே 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேர் தலைமறைவாக உள்ளதாக குஜராத் அரசு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து 94 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இவர்களில் 80 பேர் சிறையில் உள்ளனர். 14 பேர் பிணையில் உள்ளனர். 2 தனித்தனி குழுக்கள் இந்த ரயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரித்தது. குஜராத் மோடி அரசு நானாவதி குழுவை நியமித்தது. இந்தக் குழுவின் அறிக்கையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 ரயில் பெட்டி எரிந்தது விபத்தல்ல என்றும், அது முன்கூட்டியே திட்டமிட்ட சதி வேலை என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த பெட்டியில் பயணம் செய்யும் கரசேவகர்களைத் தாக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் நானாவதி குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை 2008-ம் ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டது.

கோத்ரா சம்பவம் நிகழ்ந்தபோது ரயில்வே துறை சார்பாக எத்தகைய விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே பின்னர் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், நீதியரசர் யு.சி. பானர்ஜி தலைமையில் ஒரு குழுவை நியமித்திருந்தார். இக்குழு ரயில் பெட்டி எரிந்ததற்கு விபத்தே காரணம் என குறிப்பிட்டிருந்தது.

ஆனால் மோடியால் நியமிக்கப்பட்ட நானாவதிஷா கமிட்டி அறிக்கையின் அம்சங்களின் அடிப்படியில் மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பானர்ஜி ஆணையத்தின் அறிக்கையை சம்பிரதாயத்திற்கு கூட நீதிமன்றம் பரிசீலிக்க வில்லை. மோடி அமைத்த கமிஷன் ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக நடந்த குஜராத் கலவரத்தை நியாப்படுத்த அமைக்கப்பட்டதாகும். மோடியின் ஆட்சியின் கீழ் உள்ள முழுவதிலும் ஹிந்துத்துவா சிந்தனை படைத்த நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. இதிலிருந்தே எந்த அளவுக்கு ஒரு சார்பாக இந்த தீர்ப்பு உண்மைகளை மூடி மறைக்கப் பார்த்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.


நன்றி: தமிழ் மாறன்.

Mar 1, 2011

மாவீரர்களே அணிதிரள்வோம் வாரீர்!!!

அன்பார்ந்த வாசகர்களே, நாம் இந்த வருடத்தை மாவீரன் கர்கரேக்கு முன், கர்கரேக்கு பின் என்று பிரிக்கலாம். ஏன் என்றால்? ஒரு பதினைந்து மாதமாக நம் நாடு அமைதியாக இருப்பதை நாம் உணர்கிறோம். அந்த மாவீரன் தீவிரவாதத்தின் சரியான பிறப்பிடத்தை தன் உயிரை கொடுத்து கண்டு பிடித்ததின் விளைவாக எத்தனையோ? உயிர்கள் வாழ்ந்து கொண்டிருகிறது. இந்த சந்தோசம் நிலைத்து இருக்க வேண்டுமானால்! நாம் என்ன செய்ய வேண்டும். சற்று பின்னோக்கி போய் பார்க்கலாம். இன்று நாம் வேறு, வேறு மதத்தவர்கள் ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் முறைசொல்லி மாமா என்றும், மச்சான் என்றும், அப்பு என்றும் உரிமையோடு இன்றும் அழைத்து கொள்கிறோம்.

ஏனென்றால் நாம் எல்லாம் வேறு, வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஒரே நாட்டில் பிறந்த சகோதர, சகோதரிகளே. எல்லாரும் ஒரே திராவிட இனத்தை சேர்ந்தவர்களே. அப்படி இருக்க இந்த ஜாதி மற்றும் மதத்தை வைத்து மக்களை பிரிக்கும் இவர்கள் யார்? அவர்கள் தான் ஆரிய பார்பனர்கள் என்ற உயர்ஜாதிக்காரர்கள். இவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தோற்று வித்தவர்களும், இப்போது அதை நடத்தி கொண்டிருப்பவர்களும் ஆவர். அவர்கள் ஏன்? இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துகிறார்கள் என்றால்? அதன் மூலம் வேறு, வேறு மதத்தை உடையவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கும் நம்மை பிறித்து ஆளும் சூழ்ச்சியே இது. நம்மில் யாராவது ஒருவர் மேல் இந்த பழியே போட்டு நம்மை சண்டை போட வைத்து அதில் குளிர் காயலாம் என்று திட்டம் போட்டு செயல்பட்டுள்ளார்கள்.

நாம் நாட்டின் மொழி, இனம், கலாச்சாரம் இதில் எதனுடனும் தொடர்பில்லாத இந்த வந்தேரிகள், காட்டிகொடுத்தவர்கள், இந்த நாட்டில் சுகமாக வாழ கண்டு பிடித்ததுதான் இந்த வர்ணாசிரம கொள்கை, இந்த ஜாதி வேற்றுமைகள் மற்றும் மதத்தை வைத்து நடத்தும் மத மாச்சரியங்கள் எல்லாம். இவர்கள், என்று நாம் நாட்டிற்கு வந்தார்களோ! அன்று தொட்டே நாம் விரோதிகள் ஆக்கப்பட்டோம். குண்டுவெடிப்பு, கலவரங்கள், உயீர் இழப்புகள் இதன் மூலம் நாம் இழந்தது நம் உடன்ப்பிறப்புகளை, பொருள்களை, எல்லாவற்றிக்கும் மேலாக அப்துல் கலாம் கனவுகானும் நாம் நாட்டின் முன்னேற்றத்தினை.

இதற்க்கு என்ன? முடிவு சிந்தித்துப்பாருங்கள்! என் அருமை இந்திய சகோதரர்களே! ஒரு மாவீரன் துணிந்ததால் நம்மால் பதினைந்து மாதங்கள் சந்தோசமாக வாழ முடிந்தது என்றால்? இந்த பார்ப்பன பயங்கரவாதிகளை நாட்டை விட்டு விரட்டி விட்டால்! நம்முடைய வரும் தலைமுறை எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள். சிந்தித்து பாருங்கள்! நாம் அனைவரும் ஒரே அணியில் திரண்டு! மாவீரர்களாக மாறுவோம். ஒற்றுமையாக இருந்து பயத்தில் இருந்து விடுதலை!, பசியில் இருந்து விடுதலை!, குண்டு வெடிப்பில் இருந்து விடுதலை!, கலவரங்களில் இருந்து விடுதலை!, என்ற முழக்கத்துடன் ஆரிய வந்தேறிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கி பெரியார், டாக்டர் அம்பேத்கார், அபுல்கலாம் போன்றவர்களின் கனவை நனவாக்குவோம். லட்சியம் நிறை வேறும் வரை முரசு முழங்கிக்கொண்டே இருக்கும்.....அன்புடன் உங்கள் முரசு.

சர்க்கரை வள்ளிக்கிழங்கும் அதன் பயன்களும்!!!

அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக் கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.

வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.

1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.

2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் 'ஏ' இதில் அதிகம்.

இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.

தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.

உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.

ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.

சமையல் வகைகள்: சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் 'ஏ' சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.

பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.

சட்டம் ஒரு இருட்டறை! சிரியுங்கள்!

ஒரு நண்பன் மற்றொரு நண்பனிடம் என்ன நண்பா! ரொம்ப அவசரமா கையில் டார்ச் லைட்டோடோ நடக்கிறாய் உன்னக்கு தெரியாத இன்னிக்கு கோர்ட்டிலே கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு. அது சரி அதுக்கு எதுக்கு கையில் டார்ச் லைட்டோட போற! அட சட்டம் ஒரு இருட்டறையாச்சே அது உனக்கு தெரியாதா?.

*பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை! 176 லட்சம் கோடி திருடுபவனுக்கு ஏசி அறையில் சிறை! அதபோல் விபத்து என்று கமிஷன் சொல்லும் நபர்களுக்கு தூக்கு 5000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவர்களை பல்லாக்கில் தூக்கு! சட்டம் ஒரு இருட்டறை மட்டும்மல்ல சிரிப்பரையும் கூட (காவி அறையும் கூட). சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!!

லிபியாவை நோக்கி நகரும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்!!

அமெரிக்கா பிப்,2: தரை மற்றும் கடல் வழியாக லிபியாவைச் சுற்றிலும் அமெரிக்கப் படைகளை நிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது. லிபியாவின் உள்நாட்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது அதன் நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்குடன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளவே அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர். செங்கடல் அருகே அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பல்கள் நகர்த்தப்பட்டுள்ளதுடன், இத்தாலியின் சிசிலியா தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படைக் கமாண்டோக்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கென விசேட முகாம்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையே லிபியாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிப்பது குறித்தும் அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது. அதன் மூலம் வான் வழியாக கடாபி வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்று கருதப்படுகின்றது. எங்க போகி சொல்ல இந்த மனிதாபிமானத்தை லேட்ச்ச கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போனது இந்த விமானம்தாங்கி கப்பல்களும், ராணுவமும், இந்த ஐ.நா. சபையும்.

பனைமரத்தில் "தேள் கடித்தால்" தென்னை மரத்தில் நெறிகட்டுகிறது.

வாஷிங்டன் பிப்,2: "இந்தியாவில் கட்டுமானத்துறைக்கு பெரும் மூலதனத்தை கொண்டுவரும் வகையிலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது புகழத் தக்க பட்ஜெட் என்று அமெரிக்க கம்பெனிகள் பாராட்டியுள்ளன. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டு முதலீட்டை கவரும் வகையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்திய பரஸ்பர நிதி திட்டங்களில், பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தாராளமயமாக்கப் பட்டுள்ளது. இதை அமெரிக்க கம்பெனிகள் வெகுவாக பாராட்டியுள்ளன. இதன் மூலம் கட்டுமான திட்டங்களுக்கு இந்தியா நிதியை பெற முடியும். அமெரிக்க நிறுவனங்களும், முழுமையாக பங்கு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பனைமரத்தில் தேள் கடித்தால் தென்னை மரத்தில் நெறிகட்டுகிறது என்று பழமொழி சொல்வார்களோ. என்ன ஒரு கரிசனை! ஒ மைகாட்! புல்லரிகிறது.

இவர் உண்மையிலேயே நோபல் பரிசுக்கு தகுதியானவர்தான்!!

மார்ச் நார்வே 2: 2011-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுபட்டியலில் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் இணைய தளமான விக்கிலீக்ஸ் இணையதளம் இடம் பெற்றுள்ளது. நார்வே நாட்டினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோபல் பரிசு கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் இந்தாண்டிற்கான (2011) நோபல் பரிசுக்கு மொத்தம் 241 நிறுவனங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. அத்துடன் அரசியல், பொருளாதாரம், அறிவியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்டத் துறைகளில் சிறந்த பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் உலகளவில் கவனத்தினை ஈர்த்த மக்கள் மதிப்பிற்கு உரிய இணையதளமான விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலியன் அசேஞ்ச்க்கு நோபல் பரிசு கிடைக்க நாமும் வாழ்த்துவோமே.

” நீ நிறுத்தறீயா!! நான் நிறுத்தறேன்!! ரவுடிகளின் சவால்!!

பச்சையப்பன் கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

பிப்ரவரி 23-ம் தேதி எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள், ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன் திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள் சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது. கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக் கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது, ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். உடனே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். இதற்க்கு போலீஸ் இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது. ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன்? கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன்.

எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத் தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள் ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப் போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச் சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டு கொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப் போகின்றதா என்ன?

நன்றி:வினவு, நன்றி: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு), சென்னை

அம்மா!! தாயே!! ஓட்டு போடுங்கம்மா!!

டெல்லி,மார்ச்.1:தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. அதில் இருந்து ஒருமாதம் கழித்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.
4.59 கோடி வாக்காளர்கள்: தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30. ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும். தமிழகத்தில் 99 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லா தவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம். இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

மோடி கொடுத்த ரூ.29,000 கோடி!! குஜராத் சட்டமன்றத்தில் அமளி!!

அகமதாபாத்,மார்ச்.2:அரசியல் தரகர் நீரா ராடியாவால் டாடா நிறுவனம் ரூ.29,000 ஆதாயத்தை நரேந்திர மோடி அரசில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நானோ கார் தயாரிப்பை குஜராத்துக்கு கொண்டு வந்ததற்காக டாடாவுக்கு இந்த ஆதாயத்தை மோடி அரசு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குஜராத் சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமையவிருந்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலை, மம்தா பானர்ஜியின் தூண்டுதலால் எழுந்த போராட்டம் காரணமாக வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்கள் டாடாவுக்கு அழைப்பு விடுத்தும், குஜராத்தின் சனந்த் என்ற இடத்தில் இந்த தொழிற்சாலையை அமைத்தது டாடா. இதற்காக டாடாவுக்கு ரூ.29,000 கோடி அளவுக்கு நரேந்திர மோடி அரசு சலுகைகளைக் காட்டியுள்ளாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தநிலையில், இன்று குஜராத் சட்டமன்றத்தில் நானோ தொழிற்சாலைக்கு இவ்வளவு சலுகைகளைக் கொடுத்தும், அவர்கள் வெளி மாநிலத்தவர்களைத்தான் வேலைக்கு எடுப்பதாகவும் ஊள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ மோத்வாடியா கேள்வி எழுப்பினார். உடனே இதனை மறுத்தார் அம்மாநில வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் வாஜுபாய் வாலா. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சொன்னது தவறு என்றும், இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் டாடாவுக்கு ரூ.29,000 கோடி ஆதாயத்தை மோடி அரசு அளித்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அரசியல் தரகர் நீரா ராடியா மூலமே இந்த ஆதாயத்தை டாடா அடைந்தார் என்றும் கூறினார். இதனால் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் மோதலும் எழுந்தன.

நீதித்துறையா? காவித்துறையா?

ஆமதாபாத், மார்ச்.1 : குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று விட்டு, குஜராத் திரும்பிக் கொண்டிருந்த 59 கரசேவர்கள் தீயில் கருகி செத்தனர்.ரெயில் எரிப்பு சம்ப வத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர மத கலவரம் வெடித்தது. 4 மாதம் நீடித்த இந்த கலவரத்தில் சுமார் 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்ட உமர்ஜியும் நிராபராதி என்று விடுதலை ஆனார். மீதமுள்ள 31 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 31 பேரில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அரசு வக்கீல் இந்த தீர்ப்பை வரவேற்றார். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் சின்கா இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், கோத்ரா ரெயில் எரிப்பில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தண்டனை அளவுக்கு அதிமானது. நியாயமற்றது என்றார்.

சிந்திக்கவும்: பாபர் முசூதியை இடித்துவிட்டு கலவரம் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்தவ அத்வானி, முதல் நரேந்திர மோடிவரை வெளியே. கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்டது 59 பேர் அதை விபத்து என்று கமிசன் ரிப்போர்ட் சொல்கிறது. கரசேவை காரர்கள் ரயிலின் உள்ளே இருந்து கேஸ் மற்றும் அடுப்புகளை வைத்து சமையல் செய்ததில் நடந்த விபத்தாக இருக்கலாம் என்று கமிசன் சொல்கிறது. இப்படி ஒரு சந்தேகமான நிலையில் உள்ள ஒரு வழக்கை விரைந்து நடத்தி 11 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு. . எந்த ஆதாரமும் இல்லாத அநீத தீர்ப்பு. அதேவளை பாபர் மசூதியை இடித்துவிட்டு இந்தியா முழுவதும் கலவரம் நடத்தி முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த ஹிந்து தீவிரவாதிகள் எல்லாம் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்களது வழக்கை இன்னும் முடிக்கவில்லை. 59 பேரை எரித்து கொன்றார்கள் என்றே வைத்துகொள்வோம் அவர்களுக்கு தூக்கு சரி! அதை காரணமாக வைத்து கலவரம் நடத்தி 5௦௦௦ க்கும் அதிகமான முஸ்லிம் மக்களை இரத்த வேட்டை ஆடிய மோடி கும்பலுக்கு என்ன தீர்ப்பு? இன்னும் அந்த மோடி முதலமைச்சரா இருக்கானே? இது நீதியின் தீர்ப்பு இல்லை! இது ஹிந்துவா ஆதரவு தீர்ப்பு! இது நீதி துறை இல்லை! ஹிந்துதுவாவின் படித்துறை!! /

Feb 28, 2011

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க!! அரும் மருந்து!!

இன்றைய காலகட்டத்தில் இரத்தக் குழாய் அடைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை எளிமையாக தவிர்த்து விடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்க்கு அடுத்த பெரும் பிரச்சனை இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க ஒரு எளிய வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு மற்றும் சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் என்றும் சகோதரர்களே!

மார்ச்1,மதுரை: மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள நாவலர் தெருவில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் இன்று அதிகாலை ஒரு பையில் கன்றுகுட்டியின் தலையை வைத்து மர்மநபர்கள் வீசி எறிந்துள்ளனர். இச்சம்பவத்தால் பதறிய அப்பகுதியினர் போலீசிடம் மனு கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். செய்தி: தினமலர்

சிந்திக்கவும்: மதுரையில் கலவத்தை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சதித்திட்டம் தீட்டுகிறதோ? என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படித்தான் செய்வார்கள். விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலத்தை கொண்டு போக பல வழிகள் இருந்தாலும் அதை முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் வழியாகத்தான் கொண்டு போவேன் என்று அடம் பிடிப்பார்கள். ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால்? அது என்ன பாகிஸ்தானா? என்று கேள்வி கேட்பார்கள். ஹிந்துக்களுக்கு இந்தியாவில் உரிமை இல்லையா? என்று கூக்குரல் இடுவார்கள். இவர்கள் விநாயகர் சதுர்த்தி நடத்துவதிலோ, ஊர்வலமாக போவதிலோ யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. இவர்கள் இதைவைத்து கலவரம் நடத்த அல்லவா? திட்டமிடுகிறார்கள் என்பதாலேயே இந்த எதிர்ப்பு.

மேலும், இவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிவழியாக அதுவும் மசூதி இருக்கும் வழியாக தான் போவார்கள். வேண்டும் என்றே மசூதி முன்பு நின்று மேளம் அடித்து அவர்கள் தொழுகைக்கு இடையூர் செய்வார்கள். இதுவும் பற்றாது என்று அவர்கள் தொழுகை முடிந்து வெளிவரும் ஏதாவது ஒரு நேரத்தை கவனத்தில் கொண்டு அதுவரை ஊர் வலத்தை தாமதம் செய்வார்கள். அப்படி முஸ்லிம்கள் மசூதியை விட்டு வெளிவரும் போது ஆர்.எஸ்.எஸ். கரசேவை குண்டர்களே விநாயகர் சிலை மீது செருப்பையோ, ஊர்வலத்தின் மீது கல்லையோ வீசிவிட்டு சொல்வார்கள் முஸ்லிம்கள் தாக்கிவிட்டார்கள் என்று. உடனே அந்த பகுதியில் கலவரம் நடக்கும். இதை வைத்து பிரச்சாரம் செய்து அப்பகுதி இலஞ்சர்களை தங்களது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்த வலையில் விழ வைப்பார்கள்.

இவர்கள் திட்டமிட்டு சந்தர்பத்தை பார்த்து உண்டாகிய கலவரத்தில் அப்பாவி ஹிந்து, முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு தெரியும் இது போன்ற கலவரங்கள் நடந்தால் பாதிப்படைய போவது தாங்கள் தான் என்று. அவர்கள் சிறுபான்மை சமூகம். ஹிந்து, முஸ்லிம் கலவரம் நடந்தால் அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கும். இது வெறும் கற்பனை செய்தி இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் நடந்த கலவரங்களை எடுத்துப்பார்த்தால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் முஸ்லிம்களாகத்தான் இருக்கும். பாதிப்புகள் என்பது உயிர் சேதம், பொருள் சேதம், அதுமட்டும் இல்லாமல் காவல்துறை போட்ட வழக்குகள் என்று, பாதிப்பில் எண்பது சதவீதம் முஸ்லிம்களுக்கே.

அதனாலே முஸ்லிம் இலஞ்சர்களை ஜமாஅத் பெரியவர்கள் தட்டியே வைத்திருப்பார்கள். வீட்டில் உள்ள தாய், தந்தை இவர்களை எந்த அரசியல் மீட்டிங்குளில், போது விசயங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஏன் என்றால்? எந்த பிரச்சனை வந்தாலும் பாதிப்பு அதிகம் அவர்களுக்கே. என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள். அப்படியிருக்க மாட்டு தலையை ஆர்.எஸ்.எஸ். அலுவுலகத்தின் முன்னே போட்டால் என்ன நடக்கும் என்று முஸ்லிம்களுக்கு தெரியும். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இதை வைத்து கலவரம் உண்டாக்குவார்கள் அதை சமாளிக்க நம்மால் முடியாது என்று நான்றாக தெரியும். அப்படி இருக்க இந்த மாட்டு தலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆரம்பித்து இருக்கும் ஒரு கலவர உக்கிதியாகவே இதை நம்மால் பார்க்க முடிகிறது.

இவர்கள் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு கலவரம் உண்டாக்கும் போது முஸ்லிம்களின் கடைகளை தீ இட்டு கொளுத்துவது, கொள்ளை அடிப்பது போன்ற சமூக விரோத காரியங்களில் இடுபடுவார்கள். இதனால் அதிகமான சேதம் முஸ்லிம்களுக்கே. இது மட்டும் இல்லாமல் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் எவ்வாறு கால் ஊன்றியது என்றால் அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த வடநாட்டு சேட்டுகள் தான். இவர்கள் தமிழகத்தில் வந்து தொழில் செய்ய ஆரம்பித்த போது முக்கிய வியாபார துறைகள் எல்லாம் முஸ்லிம்கள் வசம் இருந்தான. இதை பிடிக்க சேட்டுகள் செய்த சதிதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழ் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வரலாறு. இவர்களின் முழு பண உதவில் வளர்க்கப்பட்டது தான் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

தந்தை பெரியார் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவரது கடுமையான பிரச்சாரத்தால் இவர்களது வளர்ச்சி தடுக்கபட்டது. கம்னியுஸ்ட் இயக்கத்தினரும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். அம்பேத்கார் உருவாக்கிய தலித் அமைப்புகள் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் & முஸ்லிம்கள் ஒற்றுமையை பாதுகாத்து வந்தன. ஹிந்துத்துவா தீய சக்திகள் தமிழகத்தில் வளராமல் தடுக்கப்பட இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இருந்தும் இவர்கள் மீண்டும்! மீண்டும் பல்வேறு புதிய சூழ்ச்சிகளை மேற்கொண்டு ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க திட்டமிடுகிறார்கள். அதன் தொடர்ச்சியே இந்த மாட்டு தலை விவகாரம். ஹிந்துக்களே! முஸ்லிம்களே!! உசார்!! உசார்!! உசார்!! ஹிந்துக்களும் முஸ்லிம்களும் என்றும் சகோதரர்களே! இது யாராலும் பிரிக்கமுடியாத பந்தம்.

அன்புடன்: தமிழ் செல்வன்.

நன்றி: தமிழ் செல்வன் ( செய்திகள் மின்னஞ்சல் வழி).

யார் இந்த தேச பக்தர்கள்?


பிப் 28: காந்திஜியை கொன்றவர்கள். பாப்பரி பள்ளியை இடித்தவர்கள். இடிப்பதற்கு பாபாஜி அம்பேத்கர் தினமான டிசம்பர் 6 தேர்ந்தெடுத்தவர்கள். சுதந்திரப்போரட்ட வீரர்களை காட்டி கொடுத்தவர்கள் (வாஜ்பாய்). மீரட், குஜராத், மும்பை, கோயபுத்தூர், பகல்பூர், டெல்லி, ஹைதராபாத், கலவரங்களை நடத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்றவர்கள்.
கிருத்துவ மத குருமார்களை கொன்றவர்கள், கன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்கள், கிருத்துவ தேவாலயங்களை எரித்தவர்கள், கர்ப்பிணி பெண்களை கொன்றவர்கள். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குழைக்க நினைப்பவர்கள். ஹிந்து பக்தர்களை ரயிலிலில் வைத்து கொளுத்தியவர்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக இருந்தவர்கள்.
காஷ்மீரையும் இந்தியாவிலிருந்து பிரிக்க துடிப்பவர்கள். கார்கே என்ற போலீஸ் அதிகாரியை கொன்றவர்கள். மலோகன், மக்காப்பள்ளி, டெல்லி சம்ஜோத எக்ஸ்ப்ரெஸ் போன்ற குண்டு வெடிப்புகளை ஐ.எஸ்.ஐ யுடன் சார்ந்து நடத்தியவர்கள். இன்னும் நம் நாட்டிற்காக நிறைய சேவை செய்ய காத்துக்கொண்டு இருப்பவர்கள். நாட்டில் மீனவர்கள் பிரச்சனை முதல் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க தங்களை காப்பாற்ற அன்னை சோனியா காந்தி அம்மையாரையே சுற்றி சுற்றி வருகிறார்கள். இந்திய முன்னேறும் வல்லரசாகும் என்ற டாக்டர் அப்துல் கலாமின் கனவை நினைவாக்க துடிக்கும் நம் நாட்டின் தேச பக்தர்கள் (துரோகிகள். இவர்கள் யார் என்று நான் சொல்லத்தேவை இல்லை நீங்களே புரிந்திருப்பீர்கள்.

அன்புடன்: முரசு.

அடுத்தக்கட்ட ஈழப்போர்!! தயாராகிறது படையணி!!

கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்,28: இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப் புலிகளின் படை அணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை வழியாக இலங்கை வர உள்ளனர். அப்படி வரும் அவர்கள்தான் அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளனர். அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளது. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயல்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன.

கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும். சன் சீ கப்பலில் சென்றவர்களில் பலர் இறுதிக்கட்டப் போரில் தப்பியவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வழியாகத் தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் வழியாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 க்கு மேற்பட்டோர் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் தமது இராணுவக் கட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நடவடிக்கைகளை அனைத்துலக மட்டத்தில் அவர்கள் மேற்கொண்டு வந்தாலும், ராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புவதாக இலங்கை புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி குடுக்கப்படுமா?

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடை செய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும். 2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல் இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்ட போதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

Feb 27, 2011

உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

ஈரல் வறுவல்!! செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, வர மிளகாய் - 4, இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - ஒரு டீ ஸ்பூன், சோம்பு - ஒரு டீ ஸ்பூன், மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன், கறிவேப்பிலை - இரண்டு கொத்து, எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன், பட்டை, இலை - தாளிக்க.

செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.

வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, மஞ்சள் பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.
சுவையான ஈரல் வறுவல் ரெடி.

நன்றி: நளன்.

நீங்கள் முன் எப்போதும் பார்த்திராத ஒரு அற்புத மேட்ச்!!

பெங்களூரு, பிப்.27: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் சேர்த்தது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய சேவாக், சச்சின் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர்.ஆனால் சேவாக் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டிய சேவாக் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் பிரஸ்னன் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த காம்பிரும் சச்சினும் நன்கு ஆடி ரன்கள் சேர்த்தனர். காம்பிர் 51 ரன்கள் எடுத்தார். சச்சின் 120 ரன்கள் எடுத்தார். பின்னர் யுவராஜ் சிங், தோனி இருவரும் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். தோனி 31 ரன்களும் யுவராஜ் 58 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய பின்வரிசை ஆட்டக்காரர்கள் சுமாராக ஆட இந்திய அணி மட மடவென்று விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் அடுத்தடுத்து கடைசி இரு விக்கெட்கள் விழ இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது. 339ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.


தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரர் களாகக் களம் இறங்கிய ஸ்ட்ராஸ் பீட்டர்சன் இருவரும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அந்த அணியின் துவக்க வீரர் ஸ்ட்ராஸ் 158 ரன்கள் குவித்து வெற்றி நாயகனாக ஜொலித்தார். பீட்டர்சன் 31 ரன்கள் எடுத்தார். ட்ராட் 16 ரன்களும் பெல் 69 ரன்களும் குவித்தனர். போட்டி முழுவதும் இங்கிலாந்து பக்கமே சென்றுவிட்டது. 43வது ஓவரின் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தபோது அப்படித்தான் ரசிகர்கள் எண்ணினர். ஆனால் ஜாகீர் கான் வீசிய பந்தை அடித்தார் பெல். அதை அழகாகப் பிடித்து அவுட் ஆக்கினார் விராட் கோலி.

அதன் பின் வந்தவர்கள் தங்கள் பங்குக்கு ரன் விகிதத்தை ஏற்றி ஆட்டமிழந்தனர். 8 விக்கெட் இழந்த நிலையிலும் அந்த அணி வீரர்கள் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசித் தள்ளினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சரியாக 338 ரன்களை எடுத்தது. இதன்மூலம் போட்டி டை ஆனது. யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்த போட்டியால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இறுதி ஓவர் வரை ரசிகர்களை சீட் நுனி வரை வரவைத்த மேட்ச் ஆக இருந்தது இந்தப் போட்டி.