Apr 24, 2010

அதிநவீன உளவு கேமராக்கள்: அதிகபடியான எச்சரிக்கை உணர்வு தேவை.

இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.
அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?
அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.
இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.
இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.
இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.

இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!எனவே கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

குணங்குடி அனிபா வழக்கில் தாமதமாகும் தீர்ப்பை கண்டித்து தமுமுக கண்டன பேரணி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் பொருளாளருமான குணங்குடி ஆர்.எம். அனிபா அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் புனையப்பட்டு அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார்.

அவர் மீது போடப்பட்ட பல வழக்குகளில் அவர் விடுதலைப் பெற்றிருந்தாலும் ஒரேயொரு வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் இவருக்கு எதிராக காவல்துறையினர் நிறுத்திய இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக நிறைவடைந்து பல மாதங்களாகிய பிறகும் எவ்வித காரணமுமின்றி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றது.

பின்னர் ஒரு வழியாக தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தீர்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் சாட்சிகள் விசாரணை என்ற கேலிக் கூத்து நடை பெற்றுள்ளது. தொடர்ந்து தீர்ப்பு தேதி அளிக்காமல் நீதிபதியை மாற்றும் வேலையும் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 7 நிதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகள் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு யாரும் விடுதலையாகி விடக்கூடாது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறதோ என்ற கருத்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

குணங்குடி அனிபாவிற்கு பிணையும் மறுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட சிறைவாசத்தின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் குணங்குடி அனிபா அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்.தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகவும் கொடூரமான மனிதஉரிமை மீறலாகவும் உள்ளது. இந்த அநீதியை கண்டித்தும், உடனடியாக குணங்குடி அனிபா தொடர்புடைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் மே 5ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் நோக்கி கண்டன பேரணி நடைபெறவுள்ளது

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தது.

ராய்பரேலி:1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் ஃபைஸாபாத் போலீஸிற்கு முன்னரே கிடைத்தது என அத்வானியின் முன்னாள் பாதுகாவலரும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான அஞ்சு குப்தா சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.சீஃப் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எதிர்தரப்பின் குறுக்கு விசாரணையின் போது அஞ்சு குப்தா இதனை தெரிவித்தார்.

டிசம்பர் 5 ஆம் தேதி ஃபைஸாபாத் போலீஸ் ஐ.ஜி.எ.கே.ஸரன் கூட்டிய கூட்டத்தில் தான் பங்கெடுத்திருந்ததாகவும் அஞ்சு தெரிவித்தார். 45 நிமிடம் நீண்ட அக்கூட்டத்தில் பாப்ரி மஸ்ஜிதிற்கு இரண்டு விதமான அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் தகவல்களை மேற்க்கோள்காட்டி ஸரன் கூறியதாக அஞ்சு குப்தா தெரிவித்தார்.அயோத்தியில் முகாமிட்டுள்ளவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சட்ட ஒழுங்கை சீரழிக்க வாய்ப்புண்டு என்றும் உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தன.

கரசேவகர்கள் மஸ்ஜிதை தகர்ப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அத்வானி அயோத்தியாவில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியதாக அஞ்சு குப்தா ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார். பாப்ரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என்றும் அத்வானி பேசினார் என்றும் அஞ்சு குப்தா தெரிவித்திருந்தார்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் குற்றவாளிகளான இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிதான் அஞ்சு குப்தா. சன்னியாசினி சாத்வி ரிதாம்பரா, வினய் கத்தியார் உள்ளிட்ட சங்க்பரிவார தலைவர்களும் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியதாக அஞ்சுகுப்தா வாக்குமூலம் அளித்திருந்தார்.ரகசிய புலனாய்வு ஏஜன்சியான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் பிரிவில் அதிகாரியாக தற்பொழுது அஞ்சு குப்தா பணியாற்றி வருகிறார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

நக்ஸல் ஆயூததாரிகளால் 2009ம் ஆண்டு இந்திய ரயில்வேக்கு ரூ.500 கோடி இழப்பு.

நக்ஸல்களால் ரயில்வேக்கு 2009-ம் ஆண்டில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் துணைக் கேள்விகளுக்கு அமைச்சர் மம்தா அளித்த பதில்: 2008-ம் ஆண்டில் ரயில்வே மீது நக்ஸல்கள் 30 தாக்குதல்களை நடத்தினர். 2007-ம் ஆண்டில் இதுபோன்று 56 சம்பவங்கள் நடந்தன.

ஆனால் 2008-ம் ஆண்டைக் காட்டிலும் 2009-ம் ஆண்டில் ரயில்வே மீது நக்ஸல்கள் தாக்கிய சம்பவம் இரட்டிப்பானது. 58 தாக்குதல்களை அவர்கள் நடத்தினர். ரயில்வேயை குறிவைத்து அவர்கள் தாக்கினர். நாட்டிலுள்ள 65 ஆயிரம் கிலோமீட்டர் தூரமுள்ள ரயில்பாதைகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமைச்சகத்தால் கண்காணிக்க முடியாது. நம்மால் எவ்வளவு தூரத்துக்கு கண்காணிக்க முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு மட்டுமே கண்காணிக்க முடியும். நக்ஸல்கள் தாக்குதலால் ரயில்வேக்கு 2009-ம் ஆண்டில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அப்பகுதிகளில் ரயில்வே அமைச்சகம் ரயில்களை இயக்கும் என்றார்.

Apr 23, 2010

நித்யானந்தா சுவாமிகள் உலக புகழ் பெற்றார்.

சென்னை: வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பது, உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும் என்றும், இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் தனது ஆசிரமத்துக்கு வந்த பெண்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் நித்யானந்தா கையெழுத்து வாங்கியுள்ள விவரம வெளியில் வந்துள்ளது.சமீபத்தில் கர்நாடக சிஐடி போலீசார் பெங்களூர் பிடுதியில் உள்ள இவரது தியான பீட ஆசிரமத்தில் ரெய்ட் நடத்தியபோது இந்த ஆவணங்கள் சிக்கியுள்ளன.மேலும் இந்த ரெய்டில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட 35 சிடிக்களும் சிக்கியுள்ளன.

செக்ஸ் ஒப்பந்தம்:

இந்த தியான பீடத்துக்கு வருவோரிடம், குறிப்பாக பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்படுவதுண்டு.அதில் கடைசி பக்கங்களில் செக்ஸ், உடலுறவு தொடர்பான ஷரத்துக்களை சேர்த்துள்ளனர். இந்த இரு பக்கங்களில் கூறப்பட்டுள்ளதாவது:வாழ்க்கைக்கு 64 வகையான தந்திரங்கள் தேவை. அதில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை. உணர்ச்சியூட்டும் படங்களைப் பார்ப்பது, காம உணர்வுகளை தூண்டும் இசை கேட்பது, நிர்வாணமாக நடமாடுவது ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம்.

ஆசிரமத்தில் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது. யாரும் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம்; இதனால் சிலருக்கு உடல் அளவிலோ, மனதளவிலோ கஷ்டமாக இருந்தால் அதை தாங்கிக் கொள்ள வேண்டும்.செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்ட நபர் அதை பற்றி வெளியே யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாது.மேலும் இந்த ஒப்பந்தம் பற்றியும் வெளியில் சொல்லக் கூடாது.இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த 10 பக்க ஆங்கில ஒப்பந்தத்தை படித்துப் பார்க்க எல்லாம் நேரமே தராமல் நேரடியாக கையெழுத்து வாங்கியுள்ளனர் இந்த ஆசிரமத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆட்கள்.

ஆசிரமம் தானே கேட்கிறது என்பதால் பெரும்பாலானவர்கள் என்ன எழுதியுள்ளது என்பதை படிக்காமலேயே கையெழுத்து போட்டுள்ளனர். நீட்டிய பேப்பர்களில் எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டு தந்துள்ளனர்.ஆனால், இப்படி ஒப்பந்தம் போட்டு செக்ஸ் வைத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒப்பந்தத்தில் நடிகை ரஞ்சிதாவும் கையெழுத்து போட்டிருக்கலாம் என்று தெரிகிறது.5 பெண்களுடன் 'குஜால்' சிடிக்கள சி்க்கின.மேலும் சிஐடி போலீசார் நடத்திய ரெய்டில் 35 நித்யானந்தாவின் செக்ஸ் லீலை சிடிக்களும் சிக்கியுள்ளன. இந்த சிடிக்களில் நித்யானந்தா 5 பெண்களுடன் நாள் கணக்கில் செக்ஸ் கும்மாளம் அடிக்கும் காட்சிகள் அடங்கியுள்ளன.

Apr 22, 2010

நக்ஸல்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைக்கும் பேராபத்து மிக்கது: மன்மோகன் சிங்.

இடதுசாரி நக்ஸலிசம் நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைக்கும் பேராபத்து மிக்கது என்று எச்சரிக்கை விடுத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தில்லியில் புதன்கிழமை குடிமைப்பணிகள் தினத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: இடதுசாரி தீவிரவாதிகள் பின்பற்றும் நக்ஸலிசம் உள் நாட்டுப் பாதுகாப்புக்கே பேராபத்து விளைவிக்கக் கூடியது. சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நடந்த அண்மை சம்பவம் இதை உணர்த்தும் என்றார்.

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் ஏப்ரல் 6ம் தேதி நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதில் 76 போலீஸôர் இறந்தனர். இதே மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து ஐந்து சிஆர்பிஎப் முகாம்கள் மீது நக்ஸல்கள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.இது தவிர மேற்குவங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஆந்திரம், ஒரிஸô, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல்கள் பிரச்னை பெரும் சவாலாக விளங்கிவருகிறது. இந்த பின்னணியில் பிரதமர் மன்மோகன் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

நக்ஸலிசம் எங்கு வேர்விட்டு படர்கிறது என்று பார்த்தால் அது வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருக்கும் இடங்களில்தான். இதை நாம் புரிந்துகொண்டு பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்த முழு முனைப்பு காட்டவேண்டும். அந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னேற்றத் திட்டங்களின் பலன் போய்ச் சேர்வதை உறுதி செய்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Apr 21, 2010

விமான போக்குவரத்து சீராவதில் சிக்கல் : ஐஸ்லாந்து எரிமலையில் மீண்டும் சீற்றம்.

எரிமலைச் சீற்றத்தால் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்தை' மீண்டும் இயக்குவதற்கு ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்தாலும்' ஐஸ்லாந்து எரிமலையில் நேற்றும் சீற்றம் காணப்பட்டதால்' விமானப் போக்குவரத்து மீண்டும் முழு அளவில் இயங்குவது கேள்விக் குறியாகியுள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீக் குழம்புகள்இ அப்பகுதி முழுவதும் பரவியுள்ளன. எரிமலை வெடித்ததால்' அங்குள்ள வான் பகுதியில் 11 கி.மீ.' தொலைவுக்கு சாம்பல் புகை மண்டலம் பரவியுள்ளது.

இந்த சாம்பல் மண்டலத்தால்' அந்த வழியாகச் செல்லும் விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்படும் என்பதால்' கடந்த ஐந்து நாட்களாக ஐரோப்பாவிலும்' அமெரிக்கா' சீனா' இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும்' விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கான பயணிகள்' தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே முடங்கிக் கிடக்கின்றனர். விமான நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக' ஐரோப்பிய யூனியன் நாடுகளின் விமான போக்குவரத்து அமைச்சர்கள்' வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று விவாதித்தனர். இதில்' ஐரோப்பிய வான் பகுதியை சாம்பல் புகை மண்டலம் இல்லாத பகுதி' புகை மண்டலம் குறைவாக உள்ள பகுதி மற்றும் புகை உள்ள பகுதி எனஇ மூன்று பிரிவுகளாக பிரிப்பது என்றும்' இதில்' புகை மண்டலம் இல்லாத பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் விமானங்களை குறைந்த அளவில் படிப்படியாக இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி குரேஷியா' ஜெர்மனி' சுவீடன்' ருமேனியா' பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேற்று குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் மட்டும்இ நேற்று 8'000த்தில் இருந்து 9'000 விமானங்கள் இயக்கப்பட்டன. இது' ஐரோப்பாவின் ஒட்டு மொத்த விமான போக்குவரத்தில் 30 சதவீதம் மட்டுமே. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஐந்து நாட்களாக தவித்து வரும் பயணிகளுக்கு' இது நிம்மதியை ஏற்படுத்தியது.

மீண்டும் சீற்றம்: இதற்கிடையே' ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் நேற்று மீண்டும் சீற்றம் இருந்ததாகவும்' அதிலிருந்து அதிகமான தீக் குழம்புகள் வெளியானதாகவும் தகவல் வெளியானது. இருந்தாலும்' இதனால்' புகை மண்டலம் குறைவாகவே காணப்படுவதாகவும் கூறப்பட்டது. விமான போக்குவரத்து விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நிம்மதி அடைந்திருந்த பயணிகளும்' விமான நிறுவனங்களும்' எரிமலையில் மீண்டும் ஏற்பட்ட சீற்றத்தால் கவலை அடைந்துள்ளனர். பிரிட்டனின் பெரும்பாலான விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

பிரிட்டன் விமான போக்குவரத்து நிறுவன அதிகாரிகள் கூறுகையில்' 'எரிமலையில் இருந்து வெளியேறியுள்ள புதிய புகை மண்டலம்' பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் நோக்கி பரவி வருகிறது. அட்லாண்டிக் கடல் பகுதியிலும் பெரும் புகை மண்டலம் காணப்படுகிறது. இது' விமான போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' என்றனர். எரிமலைச் சீற்றத்தால்' இந்தியா' பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் விமான போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக' ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பங்கேற்க செல்லவிருந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி' தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

டைட்டானிக் கப்பல் கடிதம் ரூ. 38 1/2 லட்சத்துக்கு ஏலம்.


உலகிலேயே மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் டைட்டானிக். 1517 பேருடன் பயணம் செய்த இக்கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரணம் அடைந்தனர்.
இக்கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடித தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதம் லண்டனில் ரூ. 38 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த கடிதத்தை கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த அடோல்ப் சபீல்டு என்பவர் தனது மனைவிக்கு அன்புடன் எழுதியிருந்தார். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த அனுபவம் குறித்து அதில் எழுதப்பட்டிருந்தது. கப்பல் மூழ்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இக்கடிதம் எழுதப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகம் இக்கடிதத்தை ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்த அருங்காட்சியகத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஹைதராபாத் கலவரம் பிண்ணியில் ஹிந்து தீவிரவாத அமைப்புகள்.

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணம் சங்க்பரிவாரின் சதித்திட்டமே என உண்மைக் கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஹைதராபாத் கலவரம் ஹிந்து-முஸ்லிம் கலவரம் அல்ல எனவும், அரசியல் தூண்டுதல் உள்ளதாகவும், தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு தயார் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

சிவில் லிபர்டீஸ் மானிட்டரிங் கமிட்டி, குல நிர்மூலன போராட்ட சமிதி, பேட்ரியாடிக் டெமோக்ரேடிக் மூவ்மெண்ட்,சைதன்ய சமைக்யா உள்ளிட்ட அமைப்புகளின் ஒன்பது பேரைக் கொண்ட உண்மை கண்டறியும் குழுதான் ஹைதராபாத் கலவரத்தைக் குறித்து விசாரணை மேற்கொண்டது.மீலாதுநபி கொண்டாட்டத்தின் பொழுது கட்டப்பட்டிருந்த பச்சை நிறக்கொடிகளை மாற்றிவிட்டு காவிக் கொடிகளை கட்டமுயன்ற பா.ஜ.கவினரின் செயல்தான் கலவரத்திற்கு காரணமாக அமைந்தது.

ஹிந்து-முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வாழும் மதண்ணபேட் பகுதியில் மார்ச் 23 ஆம் தேதி மாலையில்தான் இச்சம்பவம் நடந்தது. பச்சை நிறக்கொடிகளை மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் அவகாசம் கோரியபொழுதும் அதனை பொருட்படுத்தாமல் கும்பலாக வந்த சங்க்பரிவார்கள் காவிக் கொடிகளை கட்ட ஆரம்பித்தனர்.பா.ஜ.கவின் மாநகராட்சி உறுப்பினர் சஹதேவ் யாதவின் தலைமையில்தான் இது நடந்தது. இரவு பத்தரை மணிக்கு கும்பலாக வந்த சங்க்பரிவார வன்முறையாளர்கள் மஸ்ஜிதுகளையும், வீடுகளையும், கடைகளையும் தாக்கி சேதப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து உருவான கலவரம் இதர பிரதேசங்களுக்கும் பரவியது.

வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்துவாஹினி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் வலுவாக இருக்கும் பகுதிதான் மதண்ணபேட். வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை பயன்படுத்தித்தான் தாக்குதலை நடத்தியுள்ளனர் சங்க்பரிவார்கள். தாக்குதலில் 68 மஸ்ஜிதுகள் மற்றும் தர்காக்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தகர்க்கப்பட்டுள்ளன. மூன்று கோயில்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சாமியார் நித்யானந்தா இமாச்சலப் பிரதேசத்தில் கைது!

இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்யானந்தா இன்று கைது செய்யப்பட்டார்.
அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர். கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார். அவர் மீது மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் பிடுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் ரெய்ட் நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கர்நாடகத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதன் பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.இதற்கிடையே நித்யானந்தா மீது ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கலாகியுள்ளது. அதில், அவரைக் கைது செய்து, வரும் மே மாதம் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Apr 20, 2010

பெங்களூர் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா?

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தின் அருகில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு 45நிமிடங்களுக்கு முன்பு இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
வெடித்தது சக்திக் குறைவான குண்டுகள் என்றும் இதுத்தொடர்பாக தீவிரவிசாரணை நடந்து வருவதாகவும் கர்நாடகா மாநில உள்துறை அமைச்சரும், போலீஸ் கூடுதல் டி.ஜி.பியும் கூறியுள்ளனர்.

ஐ.பி.எல்லில் நடைபெற்ற ஊழல் குறித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்த நிலையிலும் அதில் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் பெயர்கள் வெளிவந்த நிலையில்தான் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம் ஊழல் பிரச்சனையை மக்கள் மறக்கச் செய்வதற்காகத்தான் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

மேலும் கிரிக்கெட்டில் இன்று சூதாட்டம் பல்கி பெருகியுள்ள சூழலில் இக்குண்டுவெடிப்புகள் சூதாடிகளின் கைங்கர்யமாக இருக்கலாம் என்றதொரு சந்தேகமும் எழுந்துள்ளது. வெடித்த குண்டுகள் சக்திக் குறைவானதாக இருந்தாலும், இதன்மூலம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டியை காண குழுமியிருந்த 40 ஆயிரம் பார்வையாளர்களை பதட்டத்திற்குள்ளாக்கி நெரிசலை ஏற்படுத்துவதன் மூலம் மரணங்களை ஏற்படுத்தலாம் என்பதும் குண்டு வைத்தவர்களின் நோக்கமாக இருக்கலாம்.

ஆனால் இவையெல்லாவற்றையும் விட சமீபத்தில் கேரள மாநிலத்திலிருந்து பெங்களூர் சென்ற கிங்ஃபிஷர் விமானத்தில் குண்டுவைத்ததாக ஹரித்துவார் மித்ரா மண்டல் என்ற ஹிந்துத்துவா இயக்கத்தைச் சார்ந்த ராஜசேகரன் நாயர் கைதுச் செய்யப்பட்டார். ஹரித்துவார் மித்ரா மண்டல் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இவ்வியக்கத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர்பு உள்ளதற்கு ஆதாரம் உள்ளது.

இந்நிலையில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வெடித்தக் குண்டுகள் இவ்வியக்கத்தின் செயல்பாடாக இருக்குமோ என்றதொரு சந்தேகமும் எழுகிறது. மேலும் இதுத்தொடர்பாக கேரளாவில் இவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களையும், கைதுச்செய்யப்பட்ட ராஜசேகரன் நாயரிடமும் தீவிர விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரலாம். கடந்த ஆண்டு பெங்களூரில் பள்ளிவாசல் ஒன்றில் பன்றியின் மாமிசத்தை எறிந்து ஹிந்து-முஸ்லிம் கலவரம் உருவாக்கத் திட்டமிட்ட ஸ்ரீராமசேனா என்ற பயங்கரவாத இயக்கத்திற்கு இக்குண்டுவெடிப்பிற்கும் தொடர்பிருக்குமா என்பது குறித்தும் புலனாய்வு மேற்க்கொள்ள வேண்டும். ஏனெனில் குண்டுவெடிப்பை பயன்படுத்தி அதன் மூலம் ஹிந்து-முஸ்லிம் கலவரத்திற்கு அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.

கடந்த தீபாவளி தினத்திற்கு முந்திய தினத்தில் கோவாவில் ஹிந்துக்கள் கூடும் பகுதியில் குண்டுவைத்து நாசம் விளைவித்து அதன் பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் என்று திட்டமிட்ட சனாதன் சன்ஸ்தான் என்ற அமைப்பின் சதித்திட்டம் அம்பலப்படுத்தப்பட்டது.
இதுக்குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை மேற்க்கொண்டு வருகிறது. அவ்வமைப்பிற்கு பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதா என்பதைக் குறித்தும் புலனாய்வு மேற்க்கொள்ளப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக பசுவதைச் சட்டம் கொண்டுவந்தது, பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் பணத்தை வாரியிறைத்து வெற்றியை ஈட்டியது உள்ளிட்ட பா.ஜ.க அரசின் செயல்பாடுகளால் மக்கள் பா.ஜ.க ஆட்சி மீது வெறுப்புற்றுள்ள சூழலில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதால் இதுக்குறித்தும் விசாரணை மேற்க்கொள்ளப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா பாசிச வாதிகள் தங்கள் நலனுக்காக சொந்த சமூகத்தினரையும் கொல்வதற்கு தயங்காதவர்கள். இது கோத்ரா ரெயில் எரிப்பு மூலம் நாடறிந்த உண்மை. ஆகவே பெங்களூர் குண்டுவெடிப்புகள் குறித்து முழுமையான பாரபட்சமற்ற புலனாய்வு விசாரணை தேவைப்படுகிறது. அவ்விசாரணையை மேற்க்கொள்ளும் தகுதி கர்நாடகா போலீசாருக்கு இல்லை. ஏனெனில் ஆள்வது பா.ஜ.க அரசாகும். பா.ஜ.க ஆட்சியில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெற சாத்தியமில்லை. அவர்கள் இல்லாத புதிய முஸ்லிம் இயக்கத்தை உருவாக்கி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைக்க திட்டமிடலாம். எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் இக்குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைத்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

ராம ஜென்ம பூமியில் மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' - தீவிரவாதி அஷோக் சிங்கால்.

'ராம ஜென்ம பூமியில்' மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தீவிரவாதி அஷோக் சிங்கால் தெரிவித்துள்ளான். சூரத்தில் நடந்த குருக்குல் விழாவில் கலந்துக்கொள்ள வந்தபோது அஷோக் சிங்கால் இதனை பேசியுள்ளான். மேலும் அவன் தெரிவிக்கையில்; "குஜராத் முதல்வர் தீவிரவாதி நரேந்திர மோடியையும் VHP தலைவர் தீவிரவாதி பிரவீன் தொக்காடியாவையும் SIT விசாரனை நடத்துவது ஹிந்துகளை மேலும் கோபமூட்டும். கோத்ரா சம்பவத்திற்கு ஹிந்துக்களின் எதிர் நடவடிக்கை வன்முறை அல்ல அது காந்திஜி காட்டிய அஹிம்சை போராட்டம் ஏனென்றால் அநீதியை சகித்துக் கொள்ளக் கூடாது என்று காந்திஜி கூறி இருக்கிறார்" என்று அவன் பேசியுள்ளான்.

"இந்தியாவில் கிறிஸ்த்தவ மிஷினரிகள் வெறும் 2% தான் உள்ளது ஆனால் அவர்களின் முக்கிய குறிக்கோள் அதிகப்பட்ச ஹிந்துக்களை மதம் மாற்றுவதே, ஜாதி வேறுபாட்டினை பயன்படுத்தி அவர்கள் அதிக பணம் திரட்டுகிறார்கள். இன்று மதம் மாறிய ஹிந்துக்களை தன் மதத்திற்கு திருப்பும் பணியை தீவிரமாக செய்யும் ஆசிமானந்த் மீது தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது. மதம் மாறிய பல ஹிந்துக்கள் தன் மத்திற்கு திரும்பும் வண்ணம் உள்ளனர்".என்று தனது உரையில் தெரிவித்தான்.

எஸ்.டி.பி.ஐ நடத்தும் ‘மகளிர் பாராளுமன்ற அணிவகுப்பு பேரணி’.


ஆலப்புழா:மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் சிறுபான்மை,ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடுச் செய்யவேண்டும் எனக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வருகிற மே மாதம் 13-ஆம் தேதி பாராளுமன்றத்தை நோக்கிய மகளிர் அணிவகுப்பு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் ஆலப்புழையில் முடிவடைந்த தேசிய செயல் கமிட்டியில் இதுத்தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுத்தொடர்பாக கூட்டம் முடிவடைந்த பின்னர் எஸ்.டி.பி.ஐயின் தேசியத்தலைவர் இ.அபூபக்கர் கூறியதாவது:"எஸ்.டி.பி.ஐயின் மகளிர் தலைவர்களுடன் நாட்டின் பல்வேறு பகுதியைச் சார்ந்த முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், தலித்துகள், அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொள்வர். மேலும் ஜன்ந்தர் மந்தரில் தர்ணாவும் நடத்தப்படும். இதன் முடிவில் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து துவக்கத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் போதிய உள் ஒதுக்கீட்டை ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மகளிருக்கு வழங்கக்கோரும் மனு ஒன்றை அளிக்கும்.

இப்போராட்டம் இப்பிரச்சனையில் எஸ்.டி.பி.ஐ வருகிற செப்டம்பர் மாதம் மேற்க்கொள்ளவிருக்கும் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் துவக்கமாக இருக்கும். இம்மகளிர் மசோதா சிறுபான்மையின, எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி சமூகத்தினரின் எண்ணிக்கையை அதிகார சபைகளில் குறைப்பதற்கான சதித்திட்டமாகும். உயர்ஜாதியினரின் அரசியல் கட்சிகள் இம்மசோதாவை ஆதரித்ததன் மூலம் அவர்களுடைய சதித்திட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய செயல் கமிட்டியில் கீழ்க்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
1.ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.குஜராத்தில் தலித்துக்களுக்கு எதிராக நடைபெற்ற அராஜகங்களைக் குறித்து வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறோம்

3.மேற்கு வங்காளத்தில் ஆளும் இடதுசாரிக்கூட்டணி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், இஸ்ரேலிய தூதரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

4.நடைபெற்றுவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பாரபட்சமின்றி அனைத்து இந்தியர்களையும் உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

தேசிய செயல் கமிட்டிக்கூட்டத்தில் ராஜஸ்தானின் எஸ்.டி.பி.ஐ தலைவர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Apr 19, 2010

மாவோயிஸ்ட் விசயத்தில் சிதம்பரத்தை விமர்சிக்கிறார் திக்விஜய் சிங்.

மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை ஒடுக்க இந்திய அரசு கையாளும் அணுகுமுறை தொடர்பாக பல்வேறுவிதமான கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், இந்தப் பிரச்சினையை உள்துறை அமைச்சர் சிதம்பரம் கையாளும் விதம் குறித்து, மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவோயிஸ்ட் பிரச்சினையில் யாரும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ள நிலையில், திக்விஜய் சிங் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சிதம்பரம் மிக மிக இறுக்கமாகவும், அறிவுப்பூர்வமன இறுமாப்புடனும் இருப்பவர் என்று திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ள மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரை உள்ளடக்கிய பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் திக்விஜய் சிங் என்பது குறிப்பிடத்தக்கது மாவோயிஸ்டுகள் பிரச்சினையை வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டு, பழங்குடி மக்களின் பிரச்சினையாகக் கருதி கையாள வேண்டும் என சிதம்பரத்துக்கு திக்விஜய் சிங் அறிவுரை கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாத சிதம்பரத்தின் அணுகுமுறையுடன் நான் முரண்படுகிறேன் என்று திக்விஜய் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் நீதிபதியாக பதவியேற்கும் இந்தியர்.

நியூயார்க் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி என்ற பெருமை விஜய் காந்திக்குக் கிடைத்துள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக விஜய் காந்தி பொறுப்பேற்கிறார்.இந்திய அமெரிக்க சமுதாயத்திலிருநது நீதிபதி பதவிக்கு உயர்ந்துள்ள முதல் நபர் விஜய் காந்திதான்.38 வயதேயாகும் விஜய் காந்தி, கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிபதி பதவியை ஏற்கும் இளம் நீதிபதியும் ஆவார்.

அமெரிக்காவிலேயே மிகப் பெரிய மாவட்டம் கலிபோர்னியா மத்திய மாவட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மொத்தம் 1.9 கோடி பேர் உள்ளனர். தெற்கு கலிபோர்னியா சட்டக கல்லூரியில் சட்டம் பயின்றவர் விஜய் காந்தி. 12 வருடங்கள் பால், ஹேஸ்டிங்ஸ், ஜனோஸ்கி, வாக்கர் நிறுவனத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். பின்னர் அந்த சட்ட நிறுவனத்தின் பங்குதாரராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Apr 18, 2010

சவூதி அரேபியாவில் கனமழை: 50 பேர் மரணம்.

ஜித்தா:சவூதி அரேபியாவில் பிஷா, அஸீர் மாகாணங்களில் கடந்த நான்கு தினங்களாக பெய்துவரும் கனத்த மழையால் ஏற்பட்ட விபத்தில் 50 பேர் மரணமடைந்தனர். 395 பேருக்கு காயம் ஏற்பட்டது. சிவில் டிஃபன்ஸ் 250 பேரை உயிரோடு மீட்டுள்ளது. வீடுகளை இழந்த 145பேருக்கு சிவில் டிஃபன்ஸ் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். யெமன் நாட்டையொட்டிய பிரதேசத்தில்தான் மழைப்பெய்தது.

கிராமங்களையும், அரசு அலுவலகங்களையும் இணைக்கும் ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சவூதி மின்சாரத்துறை ஊழியர்கள் மின்சாரத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 4596 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜித்தாவில் கனமழையால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் மரணமடைந்திருந்தனர்.

இந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- பிரவீன் தொகாடியா.

இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ள இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தீவிரவாத விஷ்வ ஹிந்து பரிஷத். இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் மட்டுமே இது முடியும் என அது கூறியுள்ளது. இதுகுறித்து தீவிரவாத வி.எச்.பியின் தலைவர் தொகாடியா கூறும்பொழுது "வி.எச்.பி அமைப்பு இந்தியாவை 'ஹிந்து' நாடாக மாற்ற விரும்புகிறது. எப்படி இங்கிலாந்து சீர்திருத்தத் திருச்சபையாளர்கள் (Protestants) மட்டும் ஆட்சி செய்து அதை உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ செய்துள்ளார்களோ, அது போல இந்தியாவை 'ஹிந்து'க்கள் மட்டும் ஆட்சி செய்தால் இந்தியா சந்தித்துள்ள தீவிரவாதம், சவால்கள் ஆகியவற்றை எதிர் நோக்க முடியும்." என்று கூறியுள்ளார்.

மேலும் "இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்தியாவில் பெரிய மாற்றம் உண்டாகும், அது பா.ஜ.க அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் சரி" என கூறிய அவர் "இவ்வாறு அறிவிக்கப்பட்டால் யாரும் சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டார்கள், 'வந்தே மாதரம்' பாட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார்."பண்டைய காலங்களில் இருந்து இந்தியா 'ஹிந்து' நாடு தான், அதை மீண்டும் உருவாக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழு விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தீவிரவாதி பிரவீன் தொகடியாவுக்கு, திங்கள் கிழமை (19-04-2010) அன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது. எங்களுடைய பன்னாட்டுப் பொதுச் செயலாளர் தொகாடியா சிறப்புப் புலனாய்வுக் குழு முன் ஏப்ரல் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று 69 நபர்களுடன் கொல்லப்பட்ட மக்களவை முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

குளச்சல் பள்ளி வாசல் மீது தாக்குதல்: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் செய்திருப்பார்கள் பொதுமக்கள் கருத்து.

குளச்சல் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் உள்ள மீரானியா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி அதன் ஜன்னல் கண்ணாடிகளை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் உடைத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய கோரி முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று இஸ்லாமிய இயக்கங்களும் பொதுமக்களும் நம்புகிறார்கள். இந்நிலையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி குளச்சல் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.

போராட்ட குழு கன்வீனர் நூர்முகமது தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ, தமுமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மறுமலர்சி முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட 68 பேர் குளச்சல் இன்ஸ்பெக்டர் கந்த குமாரனிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மீரானியா பள்ளிவாசல் மீது கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும் மனு கொடுக்க காவல் நிலையத்திற்கு திரளாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கஷ்மீரில் இந்திய பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொள்ளப்பட்ட 70 வயது முதியவர்.

ஸ்ரீநகர்: கஷ்மீரில் ஆள்மாறி 70 வயது முதியவரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கானுக்கு தீவிரவாதத் தொடர்பு உள்ளது என்றும், அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கியும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றியதாகவும் ராணுவம் கூறியிருந்தது. ஆனால் விரிவான விசாரணையில் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கான் குப்வாரா மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண அப்பாவி மனிதர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பாவி முதியவரை அநியாயமாக சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் குற்றவாளிக் கூண்டில் சிக்கியுள்ளது