Jan 16, 2015

ஹிந்துக்கள் பயிலும் இஸ்லாமிய மதரசாக்கள்!?

மதரஸாவை பற்றி தவறான பொய்களை பரப்பும் மூடர்களுக்கு இந்த உண்மை தெரியுமா??.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்கரம் மதரசாவில் கல்வி பயிலும் 1400 மாணவர்களில் 60% மாணவர்கள் ஹிந்து சமூக மாணவர்களே ஆவர்.

மேலும் மேற்கு வங்கத்தில் மதரசாக்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 15% மாணவர்கள் ஹிந்து சமூக மாணவர்களே ஆவர்..

மதரசாக்கள் பற்றி ஹில் பல்கலைகழக பேராசிரியர் பிரசென்ஜித் பிஸ்வாஸ் மற்றும் சக ஆசிரியர்கள் குறிப்பிடும் போது சமயம், அறிவியல், கலாட்சாரம் என அனைத்திற்கும் ஒரு பாலமாக மதரசாக்கள் உள்ளதாக குறிப்பிடுகிறார். 

ஆர்கம் மதரசாவில் 12 ஆம் வகுப்பு பயிலும் ஹிந்து மாணவரான பிரின்ஸ் ஹல்டர் இங்கு பயில்வதை பற்றி குறிப்பிடும் போது நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மதரசாவில் பயின்று வருகிறேன்.நான் இங்கு கல்வி பயில்வதால் இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களை போக்க முடிந்ததாகவும், பல முஸ்லிம் நண்பர்கள் கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார். 

மேலும் நான் மதரசாவில் கல்வி பயிலும் முன் வரை இஸ்லாத்தை பற்றி நான் கூறும் போது இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கும் மதம் என்றும் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் நண்பர்கள் இல்லை என்றும் மற்ற சமூக மக்களுக்கு எதிரானவர்கள் முஸ்லிம்கள் என்று தவறாக எண்ணியிருந்தேன்.

ஆனால் நான் இங்கு 5 ஆண்டுகளாக பயில்வதால் மக்கள் தான் இஸ்லாத்தை பற்றியும், முஸ்லிம்களை பற்றியும் தவறான எண்ணத்தில் உள்ளனர் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

வழக்கம் போல மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் கூட்டங்கள் இந்த உண்மைகளை எல்லாம் மக்கள் மன்றத்தில் கூறுவதே இல்லை.. மாறாக சகோதர சமூகமாக வாழும் மக்களிடத்தில் பொய்களின் மூலம் பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி குளிர் காயும் கேடுகெட்ட கூட்டங்கள்.

4 comments:

  1. ooru rendupattaldane arasiyal kootthadikalukku kondattam

    ReplyDelete
  2. ooru rendupattaldane arasiyal kootthadikalukku kondattam

    ReplyDelete

  3. ஆர்எஸ்எஸ் தேசபற்றுள்ள இயக்கம் : கிரன்பேடி

    கேடிக்கு பதில்அடி வேணுமா -

    காந்திய கொலை செய்த கூட்டம்
    அம்பேத்காருக்கு விஷம் கொடுத்த கூட்டம்
    காமராஜரர் அவர்களை கொல்வதற்கு அவர் வீட்டை தீ இட்டு கொளுத்திய கூட்டம்

    இதுதான் இவங்க பார்வையில் தேசபற்று

    ReplyDelete
  4. thamilnattil matharakkallil hindukkalai serkkavillai

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!! மீண்டும் வருகை தாருங்கள் கருத்துக்கள் எழுதுங்கள். நன்றி!!