Jul 7, 2011

குஜராத் இனப்படுகொலை ஆவணங்களை அழித்த மோடி அரசு!

JULY 08, அஹ்மதாபாத்: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நடந்த கால அளவிலான ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து நானாவதி கமிஷன் போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

எந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதுக்குறித்து தெளிவான அறிக்கையை அளிக்குமாறு குஜராத் இண்டலிஜன்ஸ் கூடுதல் டி.ஜி.பியிடம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான மாநில உளவுத் துறையின் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக பயங்கரவாதி மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் சரத் வக்கீல் நானாவதி கமிஷனிடம் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தலையிடக்கோரி இனப்படு கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜன் சங்க்ராம் மஞ்ச் நானாவதி கமிஷனை அணுகியிருந்தது. பத்து தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமென நானாவதி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments: